ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்ரிக்கா: தீபக் சாஹர் போராட்டம் வீண்
செய்திகள் - தினகரன்
🔊 Listen to this கேப் டவுன்: இந்திய அணியுடன் நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 4 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. மலான் 1, கேப்டன் தெம்பா பவுமா 8, மார்க்ரம் 15 ரன்னில் வெளியேற, தென் ஆப்ரிக்கா 70 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து…
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடால் காலிறுதிக்கு முன்னேற்றம்
செய்திகள் - தினகரன்
🔊 Listen to this மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றார். நான்காவது சுற்றில் பிரான்சின் அட்ரியன் மன்னரினோவுடன் (33 வயது, 69வது ரேங்க்) நேற்று மோதிய நடால் (35 வயது, 5வது ரேங்க்), கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டை 7-6 (16-14) என டை பிரேக்கரில் வென்று முன்னிலை பெற்றார். அதே உற்சாகத்துடன் அடுத்த 2…
சொல்லிட்டாங்க…
செய்திகள் - தினகரன்
🔊 Listen to this சிபிஐ உள்ளிட்ட எந்த ஒரு அமைப்பின் மூலமும் நான் உட்பட யாரை வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யட்டும். நாங்கள் அதற்கு பயப்பட மாட்டோம். :- டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்இந்தியாவிடம் உதவி வாங்கிய கைகளின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில், படகுகளை ஏலத்தில் விட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க இலங்கை துடிக்கிறது. :- பாமக நிறுவனர் ராமதாஸ்பாஜ மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்பு, இந்திய கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க…
இந்த மடம் இல்லன்னா சந்த மடம் டாடா பை பை: கொடி கட்டி பறக்கும் கட்சித் தாவல்
செய்திகள் - தினகரன்
🔊 Listen to this ஒரு காலத்தில், ‘கட்சித் தாவல்’ என்பது அரசியல்வாதிகளுக்கு பெரிய மானப் பிரச்னையாக இருந்தது. இப்போது அதுவே பேஷனாகி விட்டது. வாய்ப்புகளை கோட்டை விடக் கூடாது என்பதே இவர்களின் ஒரே தாரக மந்திரம். தற்போது, உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இந்த மாநிலங்களில் ஒரு கட்சியில் சீட் கிடைக்காதவர்கள், அதற்கு, ‘டாடா… பை பை’ சொல்லிவிட்டு அடுத்த கட்சிக்கு தாவி சீட்…
அமைச்சரை ‘தூக்க சதி’ கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
செய்திகள் - தினகரன்
🔊 Listen to this பஞ்சாப்பில் பாஜ.வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. அங்கு காங்கிரசுக்கு ஆம் ஆத்மி கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், காணொலி மூலமாக நேற்று அளித்த பேட்டியில், ‘‘மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பஞ்சாப் தேர்தலுக்கு முன்னதாக எங்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை கைது செய்ய திட்டமிட்டுள்ளது. அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட எந்த ஒரு அமைப்பின் மூலமும் நான்…
திருவையாறு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 175 வது ஆராதனை விழா; மனதை உருக வைத்த பஞ்சரத்ன கீர்த்தனைகள்!
செய்திகள் - விகடன்
🔊 Listen to this சங்கீத மூம்முர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜரின் 175-வது ஆராதனை விழா திருவையாறில் சிறப்பாக நடைபெற்றது. வழக்கமாக 5 நாள்கள் நடைபெறக்கூடிய ஆராதனை விழாவினை, இந்தாண்டு, கொரோனா பரவல் காரணமாக ஒருநாள் மட்டுமே நடத்த தியாக பிரம்ம மகோற்சவ சபா குழுவினர் முடிவு செய்தனர். தியாகராஜ சுவாமிகள் முக்தியடைந்த பகுள பஞ்சமி தினத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியாக இது நடைபெற்றது. திருவையாறு திருமஞ்சன வீதியில் தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் உள்ள அவரது சிலைக்கு சிறப்பு…
கொரோனா: `புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாதது ஏன்?’ – ஆளுநர் தமிழிசை விளக்கம்!
செய்திகள் - விகடன்
🔊 Listen to this சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி, இலாசுப்பேட்டையில் உள்ள அவரின் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர், “புதுச்சேரி அரசு சார்பில் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை அடைகிறேன். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது சிலை தில்லியில் நிறுவப்பட இருக்கிறது.…
ஒகேனக்கல் 2வது கூட்டுக்குடிநீர் திட்டம் அதிமுக துணை நிற்கும்: ஓபிஎஸ் அறிக்கை
செய்திகள் - தினகரன்
🔊 Listen to this சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: 1986ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1994ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ரூ.350 கோடியில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டும் போதிய நிதியுதவி கிடைக்காததன் காரணமாக அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில்…
ஒன்றிய – மாநில அரசுகளின் உறவை சிதைக்கிறார் மோடி: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
செய்திகள் - தினகரன்
🔊 Listen to this சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நேற்று மாலை 6.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜயவாடா புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி; பாஜ மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்பு, இந்திய கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் உச்சகட்டமாக இந்திய ஆட்சிப்பணி 1954ம் ஆண்டு சட்டத்தை திருத்த முயற்சி செய்கின்றனர். மோடி செய்யும் இந்த செயல்களால் ஒன்றிய…
என்எல்சி சுரங்கத்திற்கு நிலம் தந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்: எடப்பாடி கோரிக்கை
செய்திகள் - தினகரன்
🔊 Listen to this சென்னை: தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: என்.எல்.சி. நிறுவனம் தனது மூன்றாவது சுரங்கத்தை அமைப்பதற்காக 26 கிராமங்களில் சுமார் 12,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்கள், கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளன. இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் கடந்த 17ம் தேதி என்.எல்.சி. நிறுவனத்தின் புதிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுத் திட்டத்தை அறிவித்துள்ளார். என்.எல்.சி. நிறுவனம், பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள…