Day: January 16, 2022

சொல்லிட்டாங்க…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சமூகத்தில் அமைதி இல்லாமல் உள்நாட்டு, வெளிநாட்டு தொழில்கள் இயங்க முடியாது. ஒவ்வொரு நாளும் உங்களை சுற்றி வளர்ந்து வரும் இந்த வெறுப்பை சகோதரத்துவத்துடன் முறியடிப்பேன்.- காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்திஒமிக்ரானை கண்டு யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். – தெலங்கானா கவர்னர் தமிழிசைடெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே கெஜ்ரிவால் டெல்லியில்தான் இருக்க வேண்டும். கோவாவில்…

உலக சாம்பியனை வீழ்த்தி அசத்தல் இந்தியா ஓபனில் லக்‌ஷியா சாம்பியன்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this புது டெல்லி : இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் லக்‌ஷியா சென் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் லோ கீன் யீவுடன் (சிங்கப்பூர்) நேற்று மோதிய லக்‌ஷியா (20 வயது) அதிரடியாக விளையாடி 24-22, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 54 நிமிடங்களுக்கு நீடித்தது. சூப்பர் 500…

ஆஸ்திரேலியாவுடன் கடைசி டெஸ்ட் 124 ரன்னில் சுருண்டு இங்கிலாந்து படுதோல்வி

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this *0-4 என தொடரை இழந்ததுஹோபர்ட் : ஆஸ்திரேலிய அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்டில், 271 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 124 ரன்னில் சுருண்டு பரிதாபமாக தோற்றது. இந்த வெற்றியுடன் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 4-0 என கைப்பற்றி அசத்தியது.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மோதியது. இத்தொடரில் முழுமையாக ஆதிக்கம்…

வெளியேறினார் ஜோகோவிச்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார். ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கும் நிலையில், நடப்பு சாம்பியனான ஜோகோவிச் பங்கேற்க முடியாதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அவர் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதால்,…

சில்லி பாயிண்ட்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this * ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவுடன் மோதிய இந்திய அணி 45 ரன் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா 46.5 ஓவரில் 232 ரன் (கேப்டன் யஷ் துல் 82, கவுஷல் 35, ரஷீத் 31, நிஷாந்த் 27); தென் ஆப்ரிக்கா 45.4 ஓவரில் 187 ரன் (விக்கி ஆஸ்வால் 5 விக்கெட், ராஜ் பவா 4 விக்கெட்).* துருக்கியில்…

கும்பகோணம் வெற்றிலைக்கு விரைவில் புவிசார் குறியீடு… தஞ்சை விவசாயிகள் மகிழ்ச்சி!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this பாரம்பர்ய பெருமை கொண்ட கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கக் கோரி விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தஞ்சை மாவட்டம், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களில் வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களின் பெருமை மிக்க அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது கும்பகோணம் வெற்றிலை. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெற்றிலை இந்திய அளவில் புகழ்மிக்கது. ஒரு…

கிரீமிலேயர் உச்ச வரம்பை ₹15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும் : ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்ட அறிக்கை:  கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயைக் கணக்கிடும் போது ஊதியத்தை சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று 1993ம் ஆண்டில் அப்போதைய நரசிம்மராவ் அரசு தீர்மானித்ததற்கு, சமூகநீதியை பின்னணியாகக் கொண்ட பல காரணங்கள் உள்ளன. ஆனால், ஊதியமும் கணக்கில் சேர்க்கப்பட்டால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் மாத வருமானம் ₹67 ஆயிரம் இருந்தால் அக்குடும்பத்தின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு விடும்.…

நகைக் கடன்கள் தள்ளுபடி நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் : முத்தரசன் வலியுறுத்தல்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை : நகைக் கடன்கள் தள்ளுபடி நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக சட்டமன்ற தேர்தலில் உறுதியளித்தது. கொரோனா நோய்த்தொற்று பரவல் கால நெருக்கடி காலத்தில் சாதாரண மக்களும், அடித்தட்டு பிரிவினரும் தங்கள் கைகளில் இருந்த நகைகளை அடகு வைத்து வாழ்க்கை…

வேலூர்: காளை மாடு முட்டியதில் சிறுவன் பலி! – விழா ஏற்பாட்டாளர்கள் 4 பேர் கைது

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள கள்ளிச்சேரி கிராமத்தில் நேற்று அனுமதியின்றி எருது விடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்ப்பதற்காக சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் அங்குக் கூடியிருந்தனர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் காளை மாடுகளை அதன் உரிமையாளர்கள் கூட்டத்தின் நடுவே அவிழ்த்துவிட்டதால், மிரண்டு ஓடிய மாடுகள் கூடியிருந்த பார்வையாளர்களை முட்டித் தூக்கி வீசின. தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினர், விழாவை நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை செய்தனர்.…

திருட்டு வழக்கில் கைதான மாற்றுத்திறனாளி போலீஸ் தாக்கியதால் உயிரிழப்பு?- போலீஸார் சஸ்பெண்ட்

Uncategorized
AIARA

🔊 Listen to this நாமக்கல்: காவல் துறையினர் தாக்கியதால் மாற்றுத்திறனாளி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் எழுப்பியதையடுத்து சேந்தமங்கலத்தைச் சேர்ந்த இரு எஸ்ஐகள் மற்றும் போலீஸ் ஏட்டு உள்ளிட்ட மூவரை சேலம் சரக டிஐஜி நஜ்மல் ஹோடா பணியிடை நீக்கம் செய்து உத்திரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட காந்திபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (53). இவர் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்…

Load More