Day: January 7, 2022

சீனா பாலம் கட்டி வருவது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய பின்னடைவு: ராகுல் விமர்சனம்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியின் மீது சீனா பாலம் கட்டி வருவது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. இது தொடர்பாக நேற்று முன்தினம் விளக்கம் அளித்த வெளியுறவு அமைச்சகம்,  ‘கடந்த 60 ஆண்டுகளாக சீனாவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில்தான், சீனா பாலம் அமைத்து வருகிறது. இதை ஒன்றிய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது,’ என குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில், வெளியுறவு துறை அமைச்சகத்தின் இந்த…

சொல்லிட்டாங்க…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this இந்தியா சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து நடைபோட தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழும்.      :- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்நமது எல்லையில் என்ன நடக்கிறதோ, அது நமது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.     :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திஆளுநர்- முதல்வர் ஒற்றுமையோடு செயல்பட்டு மாநில வளர்ச்சிக்கு பாடுபடுகிறோம்.கடந்த காலங்களில் இதுபோன்று இல்லாததால்தான் நிர்வாகம் முற்றிலும் சீரழிந்தது.      :- புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமிநான் மாணவனாக இருந்தபோது சில திருக்குறள் படித்துள்ளேன். தமிழில் அதை…

`இனி விவசாயப் பொருள்களை ரயிலில் கொண்டு செல்ல பாதிக்கட்டணம்தான்!’ – தெற்கு ரயில்வே அறிவிப்பு

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this சிறு குறு விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்திப் பொருட்களை சலுகை கட்டணத்தில் ரயிலில் அனுப்பலாம் என்று தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. விவசாய உற்பத்தி பொருள்களுக்கு சரியான விலை கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் அவற்றை சந்தைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவுக்கு அதிகமாக செலவு செய்து கூடுதலாக நஷ்டப்பட்டு வருகிறார்கள். கிசான் ரயில் பிரசுரம் வெளியிடல் Also Read: `பொங்கல்…

கொரோனா பீதியிலும் 5 மாநில தேர்தலை நடத்த தீவிரம் பாஜ.வின் தந்திரம்: ஜனாதிபதி பதவிக்கு குறி வைத்து வியூகம்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this 2022ம் ஆண்டு, தேர்தல் ஆண்டாக இருக்கிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளன. அதைத் தொடர்ந்து, ஜூன்-ஜூலையில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்கள் நடக்க உள்ளன. அதோடு, 75 மாநிலங்களவை எம்பி.க்களுக்கான தேர்தல். ஆண்டு இறுதியில் இமாச்சல பிரதேசம், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் என அடுத்தடுத்து வரிசையாக தேர்தல் திருவிழா களைகட்ட உள்ளது. தற்போது கொரோனா 3வது அலை…

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் அரையிறுதியில் இந்திய ஜோடி

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு  சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்தியாவின் ரோகன் போபண்ணா – ராம்குமார் ராமநாதன் இணை தகுதி பெற்றது. காலிறுதியில்  பெஞ்சமின் போன்ஸி (பிரான்ஸ்) – ஹியூகோ நைஸ் (மொனாகோ) இணையுடன்மோதிய இந்திய இணை அதிரடியாக விளையாடி 6-1, 6-3 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினர். அரையிறுதியில் போஸ்னியா & ஹெர்சகோவினாவின் டாமிஸ்லாவ் பிரிகிச் – சான்டியாகோ கோன்சாலஸ் (மெக்சிகோ)…

பேர்ஸ்டோ அபார சதம்: ‘பாலோ ஆன்’ நெருக்கடியை தவிர்த்தது இங்கிலாந்து

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து போராடி வருகிறது. சிட்னி மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (134 ஓவர்). அடுத்து  முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்…

`பொங்கல் கொண்டாடும் மனநிலையிலேயே இல்லை!’ – சேதமடைந்த நெற்பயிர்களால் விவசாயிகள் வேதனை

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this கடந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் மார்கழி மாதம் பெய்த பருவம் தவறிய கனமழையால், நெற்பயிர்கள் கீழே சாய்ந்து இப்பகுதி விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்தார்கள். இந்த ஆண்டும் இம்மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் பருவம் தவறிய கன மழையால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் கீழே சாய்ந்து இப்பகுதி விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட வேண்டிய தருணத்தில் இந்த ஆண்டும் இப்படி ஒரு அவலம் ஏற்பட்டுவிட்டதே…

இரட்டைக் கொலையும் என்கவுன்ட்டரும்: நடந்தது என்ன?- காஞ்சிபுரம் டிஐஜி பேட்டி

Uncategorized
AIARA

🔊 Listen to this செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலையில் தொடர்புடைய ரௌடிகளை போலீஸார் பிடிக்கும்போது நடத்திய என்கவுன்ட்டரில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் பின்னணி குறித்து காஞ்சிபுரம் டிஐஜி சத்தியபிரியா பேட்டி அளித்துள்ளார். செங்கல்பட்டு, சின்னநத்தம், கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பு கார்த்திக் (31). இவர் வழக்கு ஒன்றில் ஆஜராக செங்கல்பட்டு நகர காவல் நிலையத்துக்கு வந்தார். காவல் நிலையத்தில் கையெழுத்துவிட்டு அருகாமையில் உள்ள…

சீனா: `இது உண்மைதான்’ – பனிக்கட்டிகளால் உருவாக்கப்பட்ட நகரம்; கண்ணைக் கவரும் பனித் திருவிழா!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this உலகத்தில் பல நாடுகள் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல தடுமாற்றங்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் சீனாவோ வழக்கமாக நடக்கும் கொண்டாட்டங்களில் மும்முரமாகவே உள்ளது. சீனாவில் வருடா வருடம் நடத்தப்படும்‌ பனித் திருவிழா‌ இந்த வருடமும் தொடங்கப்பட்டு களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்த பனித் திருவிழா சீன நாட்டின் வடகிழக்கு மாகாணமான ஹைலோன்ஜியாங்கில் (Heilongjiang) உள்ள ஹார்பின் (Harbin) என்னும் ஊரில் நடைபெறும். இந்த வருடம் நடைபெறுவது 38 வது பனித் திருவிழா.…

குடும்பத்தினரை வீட்டுக்குள் அடைத்து கத்தி முனையில் 53 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளை: மேலூர் அருகே துணிகரம்

Uncategorized
AIARA

🔊 Listen to this மேலூர் அருகே தம்பதி உள்ளிட்ட குடும்பத்தினரை வீட்டுக்குள் அடைத்து வைத்து கத்தி முனை யில் 53 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே சத்தியபுரம் கிராமத்தில் வசிப்பவர் கோபி (28). வெளிநாடு சென்றிருந்த இவர் 6 மாதங்களுக்கு முன்பு தான் ஊர் திரும்பியிருந்தார். வீட்டில் தாய், மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

Load More