Day: January 6, 2022

சொல்லிட்டாங்க…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this அனைத்து மாநில கவர்னர்கள் தங்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று ஒன்றிய பாஜ அரசு எதிர்பார்க்கிறது. – இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாசட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதால் தமிழக மக்களுக்கு நேரில் காணும் வாய்ப்பு அமையும். – தேமுதிக தலைவர் விஜயகாந்த்புதுச்சேரி முதல்வர் ஒரு பொம்மையை போல செயல்படுகிறார். அனைத்து முடிவுகளையும் கவர்னர்தான் எடுக்கிறார். – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிதமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து எப்பாடு பட்டாவது விலக்கு…

சில்லிபான்ட்ஸ்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this *  பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(பிஎஸ்ஜி)  வீரர் லியோனல் மெஸ்சிக்கு(அர்ஜென்டீனா) 5 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் ஆட்டங்களில் பங்கேற்காமல் தனிமையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு அடுத்தடுத்த சோதனைகளில் தொற்று இல்லை என்பது உறுதியானது. அதனையடுத்து அவர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.* கிரிக்கெட் இன்று இந்தியாவின் முக்கிய விளையாட்டாக மாற காரணமான கபில்தேவ் நேற்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடினார்.

ஒருநாள் உலக கோப்பைக்கு மிதாலி தலைமையில் மகளிர் அணி: பிசிசிஐ அறிவிப்பு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this மும்பை: நியூசிலாந்தில் நடைபெற உள்ள  ஒருநாள்  மகளிர் உலக கோப்பை தொடருக்கு மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. மகளிர் ஒரு உலக கோப்பை  2021ம் ஆண்டு  நியூசிலாந்தில் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.அதன்படி மார்ச் 4ம் தேதி முதல் ஏப்.3ம்  தேதி வரை  மகளிர் உலக கோப்பை போட்டி,  நியூசியின் முக்கிய நகரங்களில் நடக்க உள்ளன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து,…

டென்னிஸ் கோர்ட்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this *அரையிறுதியில் சானியா: ஆஸியில்  நடக்கும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு  காலிறுதியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா, உக்ரைன் வீராங்கனை நாடியா  கிச்னோக் இணை 2-1 என்ற செட்களில்  ஷெல்பி ரோகர்ஸ்(அமெரிக்கா), ஹீதர்  வாட்சன்(பிரிட்டன்) இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. *காலிறுதியில் ஒசாகா: மெல்போர்ன்  சம்மர் செட் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில்  ஜப்பான் வீராங்கனை நவோமி  ஒசாகா(13வது ரேங்க்) 58 நிமிடங்களில்  2-0 என நேர்…

சதம் விளாசிய கவாஜா: டிக்ளேர் செய்த ஆஸி.

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சிட்னி: நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாடும் கவாஜா  சதம் விளாசியதால் ஆஸி,  8 விக்கெட்  இழப்புக்கு 416ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்கிறது. முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அப்போது ஆஸி முதல் இன்னிங்சில் 46.5ஓவருக்கு 3 விக்கெட்களை இழந்து  126ரன் எடுத்திருந்தது.  இந்நிலையில் 2வது நாளான நேற்று   களத்தில் இருந்த   ஸ்மித் 4*, உஸ்மான் கவாஜா 3*ரன்னுடன் பொறுப்பாக…

சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு: விஜயகாந்த் வரவேற்பு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று 2011ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது வலியுறுத்தியிருந்தேன். சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என தேமுதிக சார்பில் முதன் முறையாக கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யக்கோரி உச்சநீதிமன்றம் வரை சென்று முறையிட்டோம்.இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் நேற்று முதல் முறையாக கேள்வி நேரம் நேரடி…

ஊட்டியில் ஒரு தனி அமைப்பு 7,500 ஏக்கரை ஆக்கிரமித்துள்ளது தமிழக அரசுக்கு ரூ.4000 கோடி குத்தகை பணம் தரவில்லை; அதை மீட்க வேண்டும்: முதல்வருக்கு வேல்முருகன் எம்எல்ஏ கோரிக்கை

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) பேசியதாவது: ஊட்டிக்கு பொது கணக்கு குழு சார்பாக ஆய்வுக்கு சென்றிருந்தோம். ஒரு தனி அமைப்பு 7,500 ஏக்கரை ஆக்கிரமித்து போலியாக பட்டாக்களை பெற்றுக்கொண்டு கேரளா வங்கியில் கடன் வாங்கியுள்ளனர். கேரள வங்கிக்கு கடனை திருப்பி கட்டாததினால், அந்த இடம் கேரளா சொந்தம் கொண்டாடும் நிலை உள்ளது. அந்த நிறுவனம் ரூ.4 ஆயிரம்…

அதிமுக பொதுச்செயலாளர் என்று வதந்தி பரப்பியதாக சசிகலா மீது வழக்கு பதிய கோரி ஜெயக்குமார் மனு: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தான்தான் என்று வதந்தி பரப்பியதாக சசிகலா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது: தான்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று பொதுமக்கள் மத்தியில் சசிகலா தன்னை பிரபலப்படுத்தி வருகிறார். கட்சியின் உறுப்பினரே அல்லாத அவர் கட்சியின் கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்திவருகிறார். கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி எம்ஜிஆரின் சமாதிக்கு அதிமுக கொடியுடன் சென்ற சசிகலா…

கரும்பு விவசாயிகள் நலனுக்காக தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை: ஓபிஎஸ் வேண்டுகோள்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை. ஊழியர்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்கிறது. நடப்பாண்டில் கரும்பு மகசூல் அதிகரித்ததையடுத்து 60,000 டன் பதிவு செய்யப்பட்ட கரும்புகளும், 17,000 டன் பதிவு செய்யப்படாத கரும்புகளும் அரவைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆலையின் பராமரிப்பு செலவு, கரும்பு வெட்டுவதற்கு முன்பணம் ஆகியவற்றிற்கு பத்து கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், 2021ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஆலை ஊழியர்களின்…

Load More