Day: January 2, 2022

இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து: 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

Uncategorized
AIARA

🔊 Listen to this திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் போளூர் வட்டம் சந்த வாசல் அடுத்த கேசவபுரம் அருகே உள்ள ஜலகொண்டாபுரம் கிராமத்தில் வசித்தவர் ராமமூர்த்தி மகன் கார்த்தி(21). இவர், ஒரகடத்தில் உள்ள தனியார் வாகன உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், பணி முடிந்து ஓரகடத்தில் இருந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் நேற்று முன் தினம் இரவு வந்துள்ளார். போளூர் வட்டம் சந்தவாசல் அடுத்த வெல்லூர் கிராமம் குன்றுமேடு பகுதியில் வசித்தவர் முனுசாமி மகன்…

தென்காசி மாவட்டத்தில் ஓராண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 58 பேர் கைது

Uncategorized
AIARA

🔊 Listen to this தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்கள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை வெளியிட் டுள்ள அறிக்கை: தென்காசி மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் கடத்தல், போக்ஸோ, மணல் திருட்டு போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக 10 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டில் 58 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2020-ம்…

புத்தாண்டு கொண்டாட்டத்தில் தகராறு: குடியாத்தம் அருகே இளைஞர் கொலை

Uncategorized
AIARA

🔊 Listen to this புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய் யப்பட்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி அருகேயுள்ள கொத்தமாரி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் வினித்(23). இவர், ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் அருகே இளைஞர்கள் ஒன்றுகூடி புத் தாண்டை கொண்டாடினர். இதில் வினித்தும் கலந்துகொண்டு ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சி யுடன் வரவேற்றார்.

செஞ்சி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பங்கு தந்தை உயிரிழப்பு

Uncategorized
AIARA

🔊 Listen to this செஞ்சி அருகே வேலந்தாங்கல் நார்சாகுளத்தை சேர்ந்தவர் ஜான்சன் மரிய ஜோசப் (34) இவர் விழுப்புரம் சவேரியார் சர்ச்சில் உதவி பங்கு தந்தையாக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு திருப்பலி முடித்து, பைக்கில் தும்பூர் தேவாலயத்தில் இருந்து, விழுப்புரம் நோக்கிச் சென்றார். லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரேவந்த அடையாளம் தெரியாதவாகனம் மோதி உயிரிழந்தார்.விக்கிரவாண்டி போலீஸார்விசாரித்து வருகின்றனர். Source : www.hindutamil.in

சன்னி லியோன் பேனரை கிழித்த 23 பேர் மீது வழக்குப்பதிவு

Uncategorized
AIARA

🔊 Listen to this புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பழைய துறைமுக வளாகத்தில் பிரசித்திபெற்ற இசைக் குழுவினரின் 3 நாட்கள் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகை சன்னி லியோன் பங்கேற்பதற்காக பல இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன. இதனிடையே இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிக்ககோரி நேற்று முன்தினம் தமிழர் களம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினைச் சேர்ந்தவர்கள் பேரணியாக வந்து, பழைய துறைமுகத்தை முற்றுகையிட்டனர். அப்போது நடிகையின் விளம்பர பேனரை கிழித்தனர். அப்போது போலீஸாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மதுரை மாவட்டத்தில் 2021-ல் கொலை, குற்றங்கள் குறைவு: காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தகவல்

Uncategorized
AIARA

🔊 Listen to this மதுரை மாவட்டக் காவல் துறை யின் தீவிர நடவடிக்கையால் கடந்த 2020-ம் ஆண்டைவிட 2021-ம் ஆண்டு கொலை, குற்றங் கள் குறைந்துள்ளதாக காவல் கண் காணிப்பாளர் வீ. பாஸ்கரன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த 12 மாதங்களில் 63 கொலை வழக்குகள் பதிவானதில் 162 கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2020-ம் ஆண்டில் 67 கொலை வழக்குகளில் 232 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 வழக்கு…

தஞ்சாவூர் காவல் சரகத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 2021-ம் ஆண்டில் 256 பேர் கைது: டிஐஜி பிரவேஷ்குமார் தகவல்

Uncategorized
AIARA

🔊 Listen to this தஞ்சாவூர் காவல் சரகத்தில் 2021-ம் ஆண்டில் 256 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தருமபுரி: ராணுவ வீரர் வங்கிக் கணக்கில் பணம் திருட்டு- சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

Uncategorized
AIARA

🔊 Listen to this தருமபுரி மாவட்டம் எ.கொல்ல அள்ளி அடுத்த பருத்திநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் மகன் ராஜமாணிக்கம் (37). இவர் இந்திய ராணுவத்தில் அருணாச்சல பிரதேசத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது மாத ஊதியம் பெறுவதற்காக தேசிய மய வங்கி ஒன்றில் வங்கிக் கணக்கை பராமரித்து வருகிறார். அதே வங்கியில் கிரெடிட் அட்டையும் பெற்று பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், இவர் தனது கிரெடிட் அட்டையின் பணப் பயன்பாடு அளவை அதிகரிக்க விரும்பியுள்ளார். இதற்காக ஆன்லைனில்…

ரூ.21 லட்சம், 22 பவுன் நகையுடன் மாயமான சிறுவர்கள்

Uncategorized
AIARA

🔊 Listen to this கோவையில் வீட்டிலிருந்து எடுத்த ரூ.21 லட்சம் தொகை, 22 பவுன் நகையுடன் மாயமான சிறுவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியருக்கு 14 வயதில் மகன் உள்ளார். இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 30-ம் தேதி வீட்டருகே…

நாகை: சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது போக்ஸோ வழக்கு

Uncategorized
AIARA

🔊 Listen to this நாகை மாவட்டம் கீழ்வேளூர் அரசாணிக் குளம் தெற்கு மடவிளாகத்தைச் சேர்ந்தவர் தீபக்(21). நாகையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துகொண்டார். இதற்கு சிறுமியின் உறவினரான நாகை மேலக்கோட்டைவாசல் பகுதியைச் சேர்ந்த இந்திராணி என்பவர் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, அந்தச் சிறுமி 9 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், 4 மாதங்களுக்கு…

Load More