கோவை விமானத்தில் ரூ.1.10 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்: கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
Uncategorized
🔊 Listen to this கோவை: ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவைக்குக் கடத்தி வரப்பட்ட ரூ1.10 கோடி மதிப்பிலான தங்கத்தைக் கைப்பற்றிய மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்தனர். வெளிநாட்டில் இருந்து கோவை வரும் விமானத்தில் தங்கம் கடத்தல் செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய்ப் புலனாய்வு (டிஆர்ஐ) அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் நேற்று (டிச.29) சோதனையில் ஈடுபட்டனர்.
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை அபாரமாக வென்றது இந்திய அணி
செய்திகள் - தினகரன்
🔊 Listen to this செஞ்சூரியன்: தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை இந்திய அணி அபாரமாக சென்றுள்ளது. செஞ்சுசூரியனில் நடந்த போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 305 ரன்கள் இலக்குடன் விளையாடத் தொடங்கிய தென்னாபிரிக்கா 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் அறிவிப்பு
செய்திகள் - தினகரன்
🔊 Listen to this நியூசிலாந்து: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் அறிவித்துள்ளது. வங்கதேசம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உடனான தொடர்களுக்கு பிறகு ராஸ் டெய்லர் ஒய்வு பெறுகிறார்.
பிரிஸ்பேன் மைதானத்தில் ஆரம்பம்; செஞ்சுரியனில் முடிவு; மாஸ் காட்டிய இந்திய அணி.! பாக்ஸிங் டே டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
செய்திகள் - தினகரன்
🔊 Listen to this செஞ்சூரியன்: தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை இந்திய அணி அபாரமாக சென்றுள்ளது. செஞ்சுசூரியனில் நடந்த போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 305 ரன்கள் இலக்குடன் விளையாடத் தொடங்கிய தென்னாபிரிக்கா 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில்…
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் அறிவிப்பு
செய்திகள் - தினகரன்
🔊 Listen to this வெல்லிங்டன்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் அறிவித்துள்ளார். சொந்த மண்ணில் நடக்கும் வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட், ஆஸ்திரேலியா, நெதர்லாந்துக்கு எதிரான 6 ஒருநாள் போட்டியுடன் ஒய்வு பெறுவதாக ராஸ் டெய்லர் அறிவித்துள்ளார்.
போக்சோ வழக்கில் தேடப்படும் வேளாண் அதிகாரி சஸ்பெண்ட்
Uncategorized
🔊 Listen to this சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வரும் மாணவி ஒருவருக்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக விற்பனைக் குழு செயலாளராக பணிபுரிந்து வந்த ஜெயக்குமார்(46) என்பவர் பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு மாணவியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் சேலம் சூரமங்கலம் போலீஸார், இருவர் மீதும் அண்மையில் போக்ஸோ வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து வேளாண்துறை அதிகாரியான ஜெயக்குமார்…
மசாஜ் பார்லரில் சிறுமி பாலியல் வன்கொடுமை: மேலும் 2 பேர் கைது
Uncategorized
🔊 Listen to this புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தொப்பு அண்ணா நகர் மசாஜ் பார்லரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 17 வயது சிறுமியை சில வாரங்களுக்கு முன்பு உருளையன்பேட்டை போலீஸார் மீட்டனர். விசாரணையில் அச்சிறுமியிடம் 40 பேர் வரை பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து சுனித்தா உள்ளிட்ட 40 பேர் மீது உருளையன்பேட்டை போலீஸார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் உடையில் பெண்ணிடம் நகை பறிப்பு
Uncategorized
🔊 Listen to this கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி அலமேலு. கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் அலமேலு தன் மகனுடன் தனிமையில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அலமேலு வீட்டில் தனியாக இருந்த போது, போலீஸ் உடையில் வந்த 3 நபர்கள், ‘சிறுமியை எங்கே கடத்தி வைத்திருக்கிறாய்?’ எனக் கேட்டுள்ளனர். முன்னுக்குப்பின் புரியாத வகையில் இப்படி எதையோ சொல்லி அலமேலுவை மிரட்டியுள்ளனர்.
போலி செயலிகள் மூலம் கிரிப்டோகரன்சி மோசடிகள்: சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை
Uncategorized
🔊 Listen to this போலியான செயலிகள் மூலம் கிரிப்டோகரன்சி மோசடிகள் நடந்து வருவது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். சென்னையில் பணியாற்றும் ஐ.டி ஊழியர் ஒருவர், ஒரு டேட்டிங்செயலியில் தனது சுய விவரக் குறிப்புகளை பதிவேற்றி உள்ளார். இதையடுத்து அவரிடம் பெண் ஒருவர், சீனாவிலிருந்து பேசுவதாகக் கூறிஅறிமுகமாகியுள்ளார். மேலும் அவரைக் காதலிப்பதாகவும் கூறிய பெண், தான் சொல்லும் இணையதளத்தில் இந்திய பணத்தை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட…
மீமிசல் அருகே தொழிலதிபர் வீட்டில் திருடுபோன 687 பவுன் நகைகளில் 559 பவுன் கிணற்றில் இருந்து மூட்டையாக மீட்பு: நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்க முடிவு
Uncategorized
🔊 Listen to this மீமிசல் அருகே தொழிலதிபரின் வீட்டில் மாயமான 687 பவுன் நகைகளில் 559 பவுன் நகைகள் கிணற்றில் இருந்து நேற்று மீட்கப்பட்டன. இந்த நகைகள், நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட உள்ளன. மேலும், நகைகளை திருடி கிணற்றில் போட்ட நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.