பீர்க்கன், புடலை, பாகல்! 3 ஏக்கரில் 9 லட்சம் லாபம்!

புதுப்புது யுக்திகளைப் புகுத்தி, புத்திசாலித்தனமாக செயல்படுவர்களுக்கு… விவசாயம், பொன்முட்டையிடும் வாத்துதான்’ என்பதை நிரூபித்து வருகிறார், எழுபத்து இரண்டு வயதைக் கடந்த மூத்த விவசாயி ‘கேத்தனூர்’ பழனிச்சாமி. கேத்தனூர், ஆறு, குளம், வாய்க்கால்… என இயற்கை நீராதாரத்துக்கு வாய்ப்பில்லாத ஊர். ஆயிரத்து இருநூறு அடிக்கும் கீழே போய்விட்ட நிலத்தடி நீர்மட்டம். வறண்டு கிடக்கும் பாசனக் கிணறுகள்… இப்படியான சூழலிலும் ‘பந்தல்’ விவசாயத்தில் முடிசூடாத மன்னராக அரை நூற்றாண்டு காலம் அசத்தி வரும், பழனிச்சாமியின் வெற்றிச் சூத்திரத்தை அறிந்து கொள்ள… திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் கிராமத்தில் உள்ள அவரது பண்ணைக்குப் பயணித்தோம்.
248

Author: admin.service-public.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *