கொரோனா வைரஸ் எதில்கொல்லியாக மாட்டு மூத்திரம் செயல்படும் என சொல்லி, கல்கத்தாவில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கூடியிருந்த அனைவருக்கும் ஒரு பாஜக ஆர்வலர் மாட்டு மூத்திரத்தை கொடுத்தலால், பாஜக தொண்டர் ஒருவர் மயங்கி கீழே விழுந்தார். அதனை தொடர்ந்து மாட்டு மூத்திரன் குடுக்க கொடுத்த பாஜக பிரமுகர் கைது செய்யபட்டார்.
போலிஸ் தரப்பு கூறுவதாவது: சுமார் நாற்பது வயதுடைய நாராயண் சாட்டர்ஜி, வட கல்கத்தாவின் ஜோரசகோ பகுதியில் பாஜக வின் கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார். சம்பவம் நடந்த திங்களன்று பசு வழிபாடு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அந்நிகழ்ச்சியின் போது அங்கு கூடியிருந்தவர்களுக்கு பசு மாட்டு மூத்திரத்தை கொடுத்து, இது கொரோனா வைரஸ் எதிர்கொல்லியாக செயல்படுமென்று குடிக்க சொல்லி இருக்கிறார். குடித்ததில் ஒருவர் அங்கேயே மயங்கி விழுந்தார். அதனை தொடர்ந்து நாராயண் சாட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆதாரம்: https://www.theweek.in/news/india/2020/03/18/volunteer-falls-ill-after-drinking-cow-urine-bjp-leader-arrested-for-hosting-party.html
கோரோனா வைரஸை விரட்ட மாட்டு மூத்திரம் குடித்த பாஜக தொண்டர் மயங்கி விழுந்தார். மூத்திரம் கொடுத்த பாஜக ஆர்வலர் கைது.
220