2வது டெஸ்டில் நியூசி. ரன் குவிப்பு

2வது டெஸ்டில் நியூசி. ரன் குவிப்பு

  • 5

கிறைஸ்ட்சர்ச்: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 349 ரன் குவித்துள்ளது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. கேப்டன் லாதம், வில் யங் இருவரும் நியூசி. இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 38 ஓவரில் 148 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. யங் 54 ரன் (114 பந்து, 5 பவுண்டரி) விளாசி ஷோரிபுல் பந்துவீச்சில் முகமது நயிம் வசம் பிடிபட்டார். அடுத்து லாதமுடன் கான்வே இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி வங்கதேச பந்துவீச்சை சிதறடித்தனர். லாதம் சதம் விளாச, கான்வே அரை சதம் கடந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 349 ரன் குவித்துள்ளது. லாதம் 186 ரன் (278 பந்து, 28 பவுண்டரி), கான்வே 99 ரன்னுடன் (148 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

🔊 Listen to this கிறைஸ்ட்சர்ச்: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 349 ரன் குவித்துள்ளது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. கேப்டன் லாதம், வில் யங் இருவரும் நியூசி. இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 38 ஓவரில் 148 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. யங் 54 ரன் (114 பந்து, 5…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *