2வது இன்னிங்சிலும் இங்கிலாந்து திணறல்

2வது இன்னிங்சிலும் இங்கிலாந்து திணறல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்டில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 31 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறி வருகிறது. மெல்போர்னில் நடந்து வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. முதலில் பந்துவீச, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 185 ரன்னுக்கு சுருண்டது. இதையடுத்து,  முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸி. முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்திருந்தது. மார்கஸ் ஹாரிஸ் 20, நாதன் லயன் (0) இருவரும் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.ஒரு முனையில் ஹாரிஸ் நங்கூரம் பாய்ச்சி நிற்க… லயன் 10, லாபுஷேன்1, ஸ்மித் 16, ஹெட் 27 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். உறுதியுடன் விளையாடி அரை சதம் அடித்த ஹாரிஸ் 76 ரன் எடுத்து (189 பந்து, 7 பவுண்டரி) ஆண்டர்சன் வேகத்தில் ரூட் வசம் பிடிபட்டார். கிரீன் 17, கேரி 19, கேப்டன் கம்மின்ஸ் 21, போலண்ட் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 267 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டார்க் 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன் 4, ராபின்சன், வுட் தலா 2, ஸ்டோக்ஸ், லீச் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 82 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்துள்ளது (12 ஓவர்). கிராவ்லி 5, ஹமீத் 7, மலான் (0), லீச் (0) அடுத்தடுத்து வெளியேறினர். கேப்டன் ரூட் 12 ரன், ஸ்டோக்ஸ் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க், போலண்ட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

🔊 Listen to this மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்டில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 31 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறி வருகிறது. மெல்போர்னில் நடந்து வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. முதலில் பந்துவீச, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 185 ரன்னுக்கு சுருண்டது. இதையடுத்து,  முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸி. முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்திருந்தது. மார்கஸ் ஹாரிஸ் 20, நாதன் லயன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *