13 நாள்களில் 4-வது முறையாக ஏவுகணை சோதனை; ஐ.நா-சபையின் எச்சரிக்கையை மீறிய வட கொரியா!

  • 5

வட கொரியா அதிபர் கிம் ஜாங் கடந்த 13 நாள்களில் 4-வது முறையாக ஏவுகணை சோதனை நிகழ்த்தியிருப்பது உலக அரங்கில் பேசு பொருளாகியிருக்கிறது. 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் தங்களது அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்தார். அதற்குப் பதிலாக தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று அவர் அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்புடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

அதன் பிறகு, அமெரிக்காவிடம் ஒப்புக் கொண்டதை மீறி மீண்டும் அணு ஆயுத திட்டங்களைத் தொடங்கப் போவதாக வட கொரியா தெரிவித்து வந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே வடகொரியா தனது ஏவுகணை சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்

கடந்த 5-ம் தேதி தொலைதூர இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஏவுகணையையும், அதை தொடர்ந்து கடந்த 11-ம் தேதி ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி 2-வது பரிசோதனையும் செய்தது. இதனையடுத்து, கடந்த 15-ம் தேதி ரயிலிலிருந்து இரண்டு ஏவுகணைகளை ஏவி 3-வது முறையாகப் பரிசோதனை செய்தது.

இந்த நிலையில், வட கொரியா மீண்டும் ஏவுகணையைப் பரிசோதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது தொடர்பாக தென்கொரிய ஊடகங்கள், “வானில் இருக்கும்போதே இலக்கைத் தேர்ந்தெடுத்து அழிக்கும் வகையிலான டாக்டிகல் கைடட் ( tactical guided) என்ற ஏவுகணையை வடகொரியா இன்று பரிசோதித்தது” என்று தெரிவித்திருக்கின்றன. இதை வட கொரிய அரசு ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

வட கொரியா

கடந்த ஆண்டு ஐ.நா வட கொரியாவை, “கொரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது” எனக் கண்டித்திருந்தது. இந்த நிலையில், வட கொரியா இந்தச் சோதனையை நடத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் ஏவுகணை சோதனைகள் பற்றிப் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், “எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போகிறோம். தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதப் போக்குமே வட கொரியா தனது ராணுவத்தை மேம்படுத்தக் காரணமாகிறது. தற்காப்புக்காகவே நாங்கள் ஏவுகணை பரிசோதனைகளைச் செய்கிறோம். வட கொரியா தன் ராணுவ பலத்தை அதிகரிக்கவே விரும்புகிறது. போரை விரும்பவில்லை” எனக் கூறியிருந்து குறிப்பிடதக்கது.

Also Read: “எங்கள் நாட்டில் கொரோனா இல்லை” – அடித்துச் சொல்லும் வடகொரியா; சந்தேகம் கிளப்பும் உலக நாடுகள்!

AIARA

🔊 Listen to this வட கொரியா அதிபர் கிம் ஜாங் கடந்த 13 நாள்களில் 4-வது முறையாக ஏவுகணை சோதனை நிகழ்த்தியிருப்பது உலக அரங்கில் பேசு பொருளாகியிருக்கிறது. 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் தங்களது அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்தார். அதற்குப் பதிலாக தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று அவர் அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்புடன் அவர் நடத்திய…

AIARA

🔊 Listen to this வட கொரியா அதிபர் கிம் ஜாங் கடந்த 13 நாள்களில் 4-வது முறையாக ஏவுகணை சோதனை நிகழ்த்தியிருப்பது உலக அரங்கில் பேசு பொருளாகியிருக்கிறது. 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் தங்களது அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்தார். அதற்குப் பதிலாக தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று அவர் அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்புடன் அவர் நடத்திய…

Leave a Reply

Your email address will not be published.