ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த மகன்; வென்டிலேட்டரில் நினைவின்றிக் கிடக்கும் தந்தை!

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உள்ளிட்ட 13 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வீரமரணம் அடைந்த விமானப்படை அதிகாரிகளில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம், புத்தூர், பொன்னுகரை பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமாரும் ஒருவர். விமானப்படையில் ஜூனியர் வாரண்ட் ஆஃபிஸராக இருந்தார் பிரதீப் குமார். அவர் தந்தை ராதாகிருஷ்ணன், தாய் குமாரி. இவருக்கு ஸ்ரீலட்சுமி என்ற மனைவியும், தக்‌ஷின் தேவ் (5), தேவபிரயாக்(2) ஆகிய குழந்தைகளும் இருக்கின்றனர். அவர் தன் குடும்பத்துடன் சூலூரில் வசித்து வந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு விடுமுறைக்காக புத்தூரிலிருக்கும் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த தந்தை ராதாகிருஷ்ணனை அருகில் இருந்து கவனித்துக்கொண்டார்.

இப்போதும் அவர் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் சிகிச்சைபெற்று வருகிறார். விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பும் முன்பு, மகனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில்

முப்படைத் தளபதி பிபின் ராவத்துடன் செல்வதாக கடந்த செவ்வாய்க்கிழமை தன் தாயாரிடம் போனில் தகவல் தெரிவித்திருக்கிறார் பிரதீப் குமார். விபத்து நடந்த அன்று மதியம் அவர் தாய் போனில் அழைத்திருக்கிறார். மொபைல் போன் சுவிட்ச் ஆஃப் என வந்திருக்கிறது. அப்போதே மகனை குறித்த கவலை தாய் குமாரிக்கு ஏற்பட்டிருக்கிறது. நேற்று இரவுதான் பிரதீப் குமாரின் மரணம் குறித்த தகவல் அவர் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வெண்டிலேட்டரில் சிகிச்சையிலிருக்கும் அவரின் தந்தைக்கு மகன் இறந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.

புத்தூர் அரசு மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த பிரதீப் குமார், 2004-ம் ஆண்டு ராணுவ பணியில் இணைந்தார். பிரதீப் குமாரின் குடும்பம் ஏழ்மையானது. அவருக்கு வேலை கிடைத்தபிறகுதான் குடும்பத்தின் நிலை மேம்பட்டது. புத்தூரில் இடம் வாங்கி, அங்கு புதிய வீடுகட்டுவதற்காக திட்டமிட்டிருந்தர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பணி நிறைவுறும் நிலையில், பணிக்காலத்தை நீட்டிப்பது குறித்தும் ஆலோசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில்தான், ஹெலிகாப்டர் விபத்து அவர் உயிரை பறித்திருக்கிறது.

பிரதீப் குமார்

2018 கேரளா மழை வெள்ள பேரிடரின் போதும், உத்தரகாண்டில் மழை வெள்ளம் ஏற்பட்டபோதும், மீட்ப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார். சட்டிஸ்கரில் நக்‌ஸல் வேட்டையிலும் பங்காற்றியவர் பிரதீப் குமார். பிரதீப்குமாரின் மரணம் பொன்னுகரை ஊர் பொதுமக்களை மட்டுமல்ல கேரளத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் வீரர் பிரதீப் குமாருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Also Read: “எங்களை மீட்க வந்திருக்கிறீர்களா… Carry-on Thanks!” – கேப்டன் வருண் சிங் பேசிய வார்த்தைகள்!

🔊 Listen to this நீலகிரி மாவட்டம், குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உள்ளிட்ட 13 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வீரமரணம் அடைந்த விமானப்படை அதிகாரிகளில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம், புத்தூர், பொன்னுகரை பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமாரும் ஒருவர். விமானப்படையில் ஜூனியர் வாரண்ட் ஆஃபிஸராக இருந்தார் பிரதீப் குமார். அவர் தந்தை ராதாகிருஷ்ணன், தாய் குமாரி. இவருக்கு ஸ்ரீலட்சுமி…

🔊 Listen to this நீலகிரி மாவட்டம், குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உள்ளிட்ட 13 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வீரமரணம் அடைந்த விமானப்படை அதிகாரிகளில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம், புத்தூர், பொன்னுகரை பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமாரும் ஒருவர். விமானப்படையில் ஜூனியர் வாரண்ட் ஆஃபிஸராக இருந்தார் பிரதீப் குமார். அவர் தந்தை ராதாகிருஷ்ணன், தாய் குமாரி. இவருக்கு ஸ்ரீலட்சுமி…