வேலை செய்த வங்கியிலே ரூ.1.85 கோடி திருட்டு… ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மேலாளர்!

  • 4

மும்பை தாதரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் துணை மேலாளராக இருப்பவர் சதாசிவ்(31). இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் ரூ.2.05 கோடியை தாதர் கிளையில் டெபாசிட் செய்யப்பட்டதாக செல்லான் தயாரிக்கப்பட்டு பாந்த்ராவில் உள்ள கணக்கு சரிபார்க்கும் கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் செல்லான் இருந்தாலும், வங்கி கணக்கில் பணம் வரவில்லை. ரூ.29.16 லட்சம் மட்டுமே வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது ஆய்வில் தெரிய வந்தது. எஞ்சிய பணம் பேப்பர் மட்டத்தில் மட்டுமே வங்கியில் செலுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் தாதர் கிளையில் பணத்தை கையாளும் மற்றும் டெபாசிட் செய்யும் பிரிவில் வேலை செய்யும் சதாசிவ் இடம் விசாரித்தனர். அவர் ஆரம்பத்தில் தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார்.

ஆன்லைன் சூதாட்டம்

ஆனால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் ரூ.1.85 கோடியை எடுத்ததை ஒப்புக்கொண்டார். திருடிய பணத்தை சதாசிவ் 9 வங்கிக்கணக்கில் செலுத்தி இருக்கிறார். அந்த பணத்தை மொபைல் மூலம் டிரான்ஸ்பர் செய்து ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி இருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்தில் முழு பணத்தையும் இழுந்து விட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். அவர் சொன்ன விபரம் உண்மையா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பணத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்காக போலியான ரெசிப்ட் மற்றும் செல்லான் தயாரித்து தாக்கல் செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. சதாசிவ் கடந்த 8 ஆண்டுகளாக இந்த வங்கியில் பணியாற்றி வருகிறார். இது குறித்து மாட்டுங்கா இன்ஸ்பெக்டர் தீபக் சவான் கூறுகையில், “தாதர் வங்கி நிர்வாகிகள் கொடுத்த புகார் குறித்து விசாரித்து வருகிறோம். குற்றவாளி பணத்தை ஆன்லைனில் விளையாடி இழந்திருப்பதாக தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பிறகு விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார்” என்று தெரிவித்தார்.

AIARA

🔊 Listen to this மும்பை தாதரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் துணை மேலாளராக இருப்பவர் சதாசிவ்(31). இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் ரூ.2.05 கோடியை தாதர் கிளையில் டெபாசிட் செய்யப்பட்டதாக செல்லான் தயாரிக்கப்பட்டு பாந்த்ராவில் உள்ள கணக்கு சரிபார்க்கும் கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் செல்லான் இருந்தாலும், வங்கி கணக்கில் பணம் வரவில்லை. ரூ.29.16 லட்சம் மட்டுமே வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது ஆய்வில் தெரிய வந்தது. எஞ்சிய பணம் பேப்பர் மட்டத்தில்…

Leave a Reply

Your email address will not be published.