வெடிக்கும் செங்கல் சூளை விவகாரம்: சமூக ஆர்வலர்கள்மீது தாக்குதல்… கோவையில் பதற்றம்

கோவை தடாகம் பள்ளத்தாக்கில் ஏராளமான செங்கல் சூளைகள் இருந்தன. அந்தச் சூளைகள் மாசு கட்டுப்பாடு வாரியம், ஊராட்சி, மின்சாரவாரியம் போன்றவற்றிடம் அனுமதி வாங்காமல் இயங்கிவந்தன. இதற்காகப் பல நூறு அடிகளுக்கு குழிகள் தோண்டப்பட்டு, செம்மண் கொள்ளை நடைபெற்றுவந்தது.

தடாகம் செம்மண் கொள்ளை

Also Read: சட்டவிரோதச் செங்கல் சூளைகளுக்கு துணைபோகிறதா தி.மு.க? – கொதிக்கும் கோவை

இதனால் சுற்றுசூழலுக்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, அந்தச் செங்கல் சூளைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.

இந்நிலையில், இந்தச் சட்டவிரோத செங்கல் சூளைகளுக்கு எதிராகப் போராடிவரும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மேக் மோகன், டாக்டர் ரமேஷ், கணேஷ், சாந்தலா உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட தடாகம் பள்ளத்தாக்கை ஆய்வுசெய்துள்ளனர்.

தடாகம் பள்ளத்தாக்கு

அப்போது, செங்கல் சூளை உரிமையாளர்கள், அவர்களுடைய ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சூழ்ந்துகொண்டு அவர்களைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அவர்களைச் சிறைபிடித்துவிட்டு, காவல்துறைக்கும் தகவல் சொல்லியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அவர்களை தடாகம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையே, அங்கு திரண்ட செங்கல் சூளை ஆதரவாளர்கள், “தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்புவதால், சமூகச் செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்ய வேண்டும்” என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சமூகச் செயற்பட்டாளர்கள் தாக்கியதாக இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

போராட்டம்

இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், இரவு சமாதானப்படுத்தி அனைவரையும் அனுப்பிவைத்தனர்.

செங்கல் சூளை உரிமையாளர்கள் தரப்பில் அளித்த புகாரின் அடிப்படையில் சமூக ஆர்வலர்கள் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தடாகம் காவல் நிலையம்

அதேபோல, சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் செங்கல் சூளை உரிமையாளர்கள், ஆதரவாளர்கள் ஏழு பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

🔊 Listen to this கோவை தடாகம் பள்ளத்தாக்கில் ஏராளமான செங்கல் சூளைகள் இருந்தன. அந்தச் சூளைகள் மாசு கட்டுப்பாடு வாரியம், ஊராட்சி, மின்சாரவாரியம் போன்றவற்றிடம் அனுமதி வாங்காமல் இயங்கிவந்தன. இதற்காகப் பல நூறு அடிகளுக்கு குழிகள் தோண்டப்பட்டு, செம்மண் கொள்ளை நடைபெற்றுவந்தது. தடாகம் செம்மண் கொள்ளை Also Read: சட்டவிரோதச் செங்கல் சூளைகளுக்கு துணைபோகிறதா தி.மு.க? – கொதிக்கும் கோவை இதனால் சுற்றுசூழலுக்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, அந்தச் செங்கல் சூளைகளுக்கு சென்னை உயர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *