வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: வாலிபர் கைது

ஆவடி: சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை கடத்தி விற்பனை செய்யப்படுவதாக அம்பத்தூரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன.  குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மேற்பார்வையில்  இன்ஸ்பெக்டர் முகேஷ்ராவ் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், சென்னை அடுத்த ராமாபுரம், திருப்பதி நகரில் உள்ள வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.  இதனையடுத்து, நேற்று முன்தினம் மாலை ராமாபுரம் சென்று அங்குள்ள வீட்டை தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு வீட்டில் இருந்து 2டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து அங்கிருந்த வாலிபரையும் பிடித்தனர்.  பின்னர், போலீசார் அவரை அம்பத்தூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அரிசி பதுக்கி வைத்திருந்த ராமாபுரம், பூத்தப்பேடு, அன்னை சத்யா நகரை சார்ந்த சதீஷ் (23) என்பது தெரியவந்தது. இவர், ரேஷன் கடையில் இருந்து அரிசியை வாங்கி, வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. போலீசார் சதீஷை கைது செய்தனர். பின்னர், அவரை காஞ்சிபுரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.  

🔊 Listen to this ஆவடி: சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை கடத்தி விற்பனை செய்யப்படுவதாக அம்பத்தூரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன.  குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மேற்பார்வையில்  இன்ஸ்பெக்டர் முகேஷ்ராவ் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், சென்னை அடுத்த ராமாபுரம், திருப்பதி…