`விவசாய இயந்திரங்களுக்கு மானியத்தில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும்!’ – வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். மத்திய அரசின் அமைச்சரவை செயலாளர், மத்திய அரசின் விவசாயத்துறை செயலாளர், மத்திய நிதித்துறை செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விவசாய இயந்திரங்கள் பயன்பாடு

Also Read: பிரதமர் மோடி தூக்கிப்பிடிக்கும் இயற்கை விவசாயம்; இதற்கான விதை போடப்பட்டது இப்படித்தான்!

அந்த வழக்கில், “நாட்டின் வளர்ச்சியில் விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. விவசாயம் என்பது உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் சார்ந்தது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் தொழிலாகவும் உள்ளது.

விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் விவசாயம் என்பது லாபகரமான தொழிலாக இருக்கவில்லை. விவசாயம் என்பது காலம் சார்ந்ததாக இருப்பதால் உரிய நேரத்தில் வேலைக்கு ஆள்கிடைக்கவில்லை என்றால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. அதனால் விவசாய இயந்திரங்கள் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

தமிழக அரசு கூட 2021 -22-ம் ஆண்டு வெளியிட்ட வேளாண் துறை கொள்கையில் கூட, விவசாயத்துக்கு அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 70 சதவிகிதம் விவசாயிகளிடம் இயந்திரங்கள் இருக்கின்றன. இயந்திரங்களை வைத்தே நெல், பருத்தி, நிலக்கடலை, கரும்பு, தேங்காய், டீ, காபி உள்ளிட்டவற்றைப் பயிரிட்டு அறுவடை செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மீனவர்களுக்கு மானிய விலையில், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. பீகார் மாநிலத்தில் விவசாயிகளுக்கு டீசல் மானிய விலையில் லிட்டருக்கு 50 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. கர்நாடகாவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல், வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அது போல, தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல் டீசல் வழங்க உத்தரவிடக்கோரி கடந்த நவம்பர் 2-ம் தேதி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பியிருந்தேன். அதைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தால் ஏற்கப்பட்ட இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

நம்மாழ்வாருடன் வழக்கறிஞர் அய்யா

Also Read: இலவசமாக உழவு ஓட்டிக் கொள்ளலாம்… டாஃபே நிறுவனம் அறிவிப்பு!

இது குறித்து சமூக ஆர்வலரும் விவசாயியுமான அய்யா கூறுகையில், “விவசாயம் என்பது லாபகரமானதாக இல்லாததால் ஏராளமான விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்குச் செல்லத் தொடங்கி விட்டார்கள். இது மிகப்பெரிய பிரச்னையை நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படுத்திவிடும். மிகவும் சிக்கலான இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகளும் விவசாய சங்கங்களும் முன்னெடுக்காதது வருத்தமாக இருக்கிறது.

நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளேன். வீட்டுப் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாகச் சொன்ன தமிழக அரசு, விவசாயிகள் விவசாய இயந்திரங்கள் பயன்படுத்த மானிய விலையில் பெட்ரோல் டீசல் கொடுப்பதில் என்ன சிரமம் இருக்க முடியும்?” என்றார்.

AIARA

🔊 Listen to this நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். மத்திய அரசின் அமைச்சரவை செயலாளர், மத்திய அரசின் விவசாயத்துறை செயலாளர், மத்திய நிதித்துறை செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. விவசாய இயந்திரங்கள் பயன்பாடு Also Read: பிரதமர் மோடி தூக்கிப்பிடிக்கும் இயற்கை விவசாயம்; இதற்கான விதை போடப்பட்டது இப்படித்தான்! அந்த வழக்கில், “நாட்டின் வளர்ச்சியில் விவசாயம்…

AIARA

🔊 Listen to this நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். மத்திய அரசின் அமைச்சரவை செயலாளர், மத்திய அரசின் விவசாயத்துறை செயலாளர், மத்திய நிதித்துறை செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. விவசாய இயந்திரங்கள் பயன்பாடு Also Read: பிரதமர் மோடி தூக்கிப்பிடிக்கும் இயற்கை விவசாயம்; இதற்கான விதை போடப்பட்டது இப்படித்தான்! அந்த வழக்கில், “நாட்டின் வளர்ச்சியில் விவசாயம்…

Leave a Reply

Your email address will not be published.