விலகிய அமைச்சருக்கு எதிராகக் கைது வாரண்ட்; மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா! – என்ன நடக்கிறது உ.பி-யில்?

  • 10

உத்தரப்பிரதேச சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமாகக் கருதப்படும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் இந்தத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க முனைப்புக் காட்டி வருகிறது. ஆனால், பா.ஜ.க-வைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் அடுத்தடுத்து கட்சியிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே, அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் சமாஜ்வாடி கட்சியில் சேருகிறார்.

ஆனாலும், தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வெள்ளிக்கிழமை தெரிவிப்பேன் என்றும், தன்னுடன் பா.ஜ.க-வில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ-க்கள் வெளியேறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சுவாமி பிரசாத் மவுரியாவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார்.

யோகி ஆதித்யநாத்

இந்தப் புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து மவுரியாவுக்கு எதிராக உ.பி அரசு தரப்பில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு மவுரியா இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அப்போது மவுரியா பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்தார். கடந்த தேர்தலில் தான் அவர் பா.ஜ.க-வுக்கு வந்தார். இப்போது மவுரியா மீண்டும் பா.ஜ.க-வுக்கு வர வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பதால், அவர் மீது 2014-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு புறம் மவுரியாவை சமாதானப்படுத்தும் வேலைகளும் பா.ஜ.க தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே மவுரியா உட்பட 4 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-விலிருந்து விலகிவிட்டனர். இந்த நிலையில், புதிய திருப்பமாக மற்றொரு அமைச்சரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தாராசிங் சவுகான் என்ற அந்த அமைச்சர் பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

ஏற்கெனவே பதவி விலகிய சுவாமி பிரசாத் மவுரியாவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் ஆவார். பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர்கள் அடுத்தடுத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகி வருவது பா.ஜ.க-வுக்கும், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தாராசிங் அனுப்பியிருக்கும் ராஜினாமா கடிதத்தில், “நான் முழு பங்களிப்புடன் தான் பணியாற்றினேன். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான அரசின் அணுகுமுறை என்னைக் காயப்படுத்திவிட்டது. எனவேதான் அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறேன். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு அலட்சியமாகக் கொண்டது” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அகிலேஷ் யாதவை சந்தித்து பேசிய எஸ்.பி.மவுரியா

இதே போன்று தேர்தலைச் சந்திக்கும் மற்றொரு மாநிலமான கோவாவிலும் பா.ஜ.க-விலிருந்து அமைச்சர் மிக்கேல் லோபோ மற்றும் எம்.எல்.ஏ பிரவின் ஆகியோர் விலகியுள்ளனர். கோவாவில் மீண்டும் தேர்தலைச் சந்திக்க இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் அதிகமான பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்று கருதி கட்சியிலிருந்து விலகி வருவதாகக் கூறப்படுகிறது.

Also Read: உ.பி: `அமைச்சர் உட்பட 5 பாஜக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா!’ – வலுப்பெறுகிறதா அகிலேஷ் கட்சி?

AIARA

🔊 Listen to this உத்தரப்பிரதேச சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமாகக் கருதப்படும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் இந்தத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க முனைப்புக் காட்டி வருகிறது. ஆனால், பா.ஜ.க-வைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் அடுத்தடுத்து கட்சியிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே,…

AIARA

🔊 Listen to this உத்தரப்பிரதேச சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமாகக் கருதப்படும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் இந்தத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க முனைப்புக் காட்டி வருகிறது. ஆனால், பா.ஜ.க-வைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் அடுத்தடுத்து கட்சியிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே,…

Leave a Reply

Your email address will not be published.