விருதுநகர்: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வெடித்த வெடிகுண்டு! -5 நாள்களில் 15 வெடிகுண்டுகள் பறிமுதல்

  • 5

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மலையடிவாரப் பகுதியில் சாம்பல் நிற அணில்களின் சரணாலயம் இயங்கி வருகிறது. இங்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் சரணாலயமும் அமைய உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கான்சாபுரம் அருகிலுள்ள பெரிய ஓடைப் பகுதியில் இருந்து மூலக்காடு கிராமத்திற்குச் செல்லும் பகுதியில் 2 சாக்குப்பைகளில் இருந்து 9 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதி

வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு 9 வெடிகுண்டுகளையும் செயலிழக்கச் செய்தனர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தினமும் கடந்து செல்லும் வழியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் மத்தியில் அச்சம் நிலவியது.

இதுதொடர்பாக போலீஸார், 3 பேரை கைது செய்தனர். இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தெற்கு கோட்டையூர் மேற்கு காலனிப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த காலனிப் பகுதியில் உள்ள ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள தரிசு நிலத்தின் வழியே பாலசுப்பிரமணியன் என்ற விவசாயி டிராக்டர் ஓட்டிச் சென்றுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட 6 நாட்டு வெடிகுண்டுகள்

அப்போது அங்கு கிடந்த நாட்டுவெடிகுண்டு ஒன்று டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஆனால், விவசாயி பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அப்பகுதியில் நடமாடிச் சென்ற ஊர் மக்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து வத்திராயிருப்பு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்பகுதியில் பொதுமக்கள் நுழைந்து விடாதபடி கயிறுகளால் கட்டப்பட்டு பாதுகாப்பிற்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டு வெடித்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் செய்த ஆய்வில் மேலும் 6 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி, அழகர்சாமி, முருகன், முத்தையா ஆகிய 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வனப் பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிகளவில் காணப்படுகிறது.

போலீஸார் ஆய்வு

இவை, உணவு தேடி தென்னந்தோப்பு, காய்கறி மற்றும் பழத்தோட்டத்திற்கு வருவது வழக்கம். காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டதா? அல்லது நாச வேலைகளுக்காக பதுக்கி வைக்கப்பட்டதா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயிகள், பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AIARA

🔊 Listen to this விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மலையடிவாரப் பகுதியில் சாம்பல் நிற அணில்களின் சரணாலயம் இயங்கி வருகிறது. இங்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் சரணாலயமும் அமைய உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கான்சாபுரம் அருகிலுள்ள பெரிய ஓடைப் பகுதியில் இருந்து மூலக்காடு கிராமத்திற்குச் செல்லும் பகுதியில் 2 சாக்குப்பைகளில் இருந்து 9 நாட்டு வெடிகுண்டுகளை…

AIARA

🔊 Listen to this விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மலையடிவாரப் பகுதியில் சாம்பல் நிற அணில்களின் சரணாலயம் இயங்கி வருகிறது. இங்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் சரணாலயமும் அமைய உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கான்சாபுரம் அருகிலுள்ள பெரிய ஓடைப் பகுதியில் இருந்து மூலக்காடு கிராமத்திற்குச் செல்லும் பகுதியில் 2 சாக்குப்பைகளில் இருந்து 9 நாட்டு வெடிகுண்டுகளை…

Leave a Reply

Your email address will not be published.