“விமான நிலையத்தில் அத்தைக்கு பிரியாவிடை” – நெட்டிசன்களை கவர்ந்த குட்டிப் பாப்பாவின் செயல்!

உலகம் முழுவதுமுள்ள நெட்டிசன்களின் மனங்களை கவர்ந்துள்ளது குட்டிப் பாப்பாவின் செயல். அது வீடியோவாக வைரலாகியும் வருகிறது. இந்த வீடியோவை பார்த்தால் நீங்களும் புன்னகை கொள்வீர்கள். அப்படி என்ன செய்தார் அவர்?

“விமான நிலையத்தில் பாதுகாவலர்களின் அனுமதியை பெற்றுக் கொண்டு கடல் கடந்து பயணிக்கும் தனது அத்தைக்கு பிரியா விடை கொடுத்தார் அவர்” – என்ற கேப்ஷனை தாங்கி நிற்கிறது ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோ. 

அந்த வீடியோவில் சிவப்பு நிற பூ போட்ட ஆடை அணிந்துள்ள பெண் குழந்தை விமான நிலைய பாதுகாவலர்களுக்கு எதிரே நிற்கிறார். பின்னர் அவர்களிடம் அனுமதியை பெற்றுக் கொண்டு தனது அத்தையை ஓடிச் சென்று அணைத்துக் கொள்கிறார். 

இந்த வீடியோ எங்கு? எப்போது? எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இருந்தாலும் இணையவெளியில் பலரது இதயங்களை வென்றுள்ளது. 6.6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது இந்த வீடியோ. 70 ஆயிரம் லைக்குகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு பலரும் குழந்தையின் செயலை பாராட்டி கமெண்ட் செய்தும் வருகின்றனர். 

இதையும் படிக்கலாம் : ‘கிரிக்’கெத்து 5: 2003 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சினின் பேட் எழுதிய காவியம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

🔊 Listen to this உலகம் முழுவதுமுள்ள நெட்டிசன்களின் மனங்களை கவர்ந்துள்ளது குட்டிப் பாப்பாவின் செயல். அது வீடியோவாக வைரலாகியும் வருகிறது. இந்த வீடியோவை பார்த்தால் நீங்களும் புன்னகை கொள்வீர்கள். அப்படி என்ன செய்தார் அவர்? “விமான நிலையத்தில் பாதுகாவலர்களின் அனுமதியை பெற்றுக் கொண்டு கடல் கடந்து பயணிக்கும் தனது அத்தைக்கு பிரியா விடை கொடுத்தார் அவர்” – என்ற கேப்ஷனை தாங்கி நிற்கிறது ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோ.  அந்த வீடியோவில் சிவப்பு நிற…