`வாழ்க்கை ஒரு வட்டம்’ – வைரலாகும் ஸ்மார்ட் லேண்ட்லைனும் பின்னணியும்!

புதிய கண்டுபிடிப்புகளைக் கொடுப்பது மட்டும் தொழில்நுட்பம் அல்ல, பழைய கண்டுபிடிப்புகளை நவீனப்படுத்தி புதுமையாகக் கொடுப்பதும் தொழில்நுட்பமே. ஆம், டிவி, ப்ரிட்ஜ், ஏசி தொடங்கி வாட்ச் வரை அனைத்தும் இன்று ஸ்மார்ட்டாகிவிட்டன. அப்படி சமீபத்தில் இணையத்தில் வைரலான கேட்ஜெட் ‘ஸ்மார்ட் லேண்ட்லைன்’.

ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த நிக்கி டோன்ஸ்கி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஸ்மார்ட் லேண்ட்லைன்’ படத்தைப் பகிர்ந்தார். முதல் பார்வையில், டேப்லெட் போலத் தோற்றமளிக்கும் இதில் ரிசீவர் இருக்கிறது. அதனால் அப்படியே பழைய லேண்ட்லைன் போனை நினைவுபடுத்துகிறது இது. வாட்ஸ்அப், யூடியூப், வாய்ஸ் ரெக்கார்டர், ப்ரவுசர் என அனைத்து வசதிகளும் இதில் இருப்பதைப் புகைப்படத்தில் பார்க்கலாம்.

ஸ்மார்ட் லேண்ட்லைன்

டோன்ஸ்கியின் இந்த ட்விட்டர் பதிவு சட்டென வைரலானது. உலகமெங்கும் மக்களை ஆச்சரியப்படுத்திய இந்தப் புகைப்படம் 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸை ட்விட்டரில் பெற்றிருக்கிறது. சரி, இப்படி ஒரு சாதனம் உண்மையில் இருக்கிறதா? அதன் சிறப்பம்சங்கள் என்ன?

இந்த புகைப்படத்தைப் பதிவுசெய்த டோன்ஸ்கியே இதைப் பற்றி அடுத்துப் பதிவுசெய்தார். KT5(3C) எனும் பெயர்கொண்ட இந்த ‘ஸ்மார்ட் லேண்ட்லைன்’ டேப்லெட் ஆண்ட்ராய்டு 10.0 ஓஎஸ்ஸில் இயங்குகிறது. VoLTE மூலம் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை இதில் செய்ய முடியும். நீக்கக்கூடிய 2500mAh பேட்டரி கொண்டுள்ளதால் பவர் கட் நேரத்திலும் இதைப் பயன்படுத்த முடியும்.

இந்த KTC5 (3C) மாடல் சுமார் $110 – $130 விலைக்கு விற்பனையாகிறது. அதாவது இந்திய விலையில் சுமார் 10,000 ரூபாய்!

🔊 Listen to this புதிய கண்டுபிடிப்புகளைக் கொடுப்பது மட்டும் தொழில்நுட்பம் அல்ல, பழைய கண்டுபிடிப்புகளை நவீனப்படுத்தி புதுமையாகக் கொடுப்பதும் தொழில்நுட்பமே. ஆம், டிவி, ப்ரிட்ஜ், ஏசி தொடங்கி வாட்ச் வரை அனைத்தும் இன்று ஸ்மார்ட்டாகிவிட்டன. அப்படி சமீபத்தில் இணையத்தில் வைரலான கேட்ஜெட் ‘ஸ்மார்ட் லேண்ட்லைன்’. ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த நிக்கி டோன்ஸ்கி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஸ்மார்ட் லேண்ட்லைன்’ படத்தைப் பகிர்ந்தார். முதல் பார்வையில், டேப்லெட் போலத் தோற்றமளிக்கும் இதில் ரிசீவர் இருக்கிறது.…