வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவான 2 பேர் 6 ஆண்டுக்கு பிறகு சிக்கினர்

சென்னை: வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சயீத் சதாம் (25), கடந்த 2015ம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் வாடகை வீட்டில் தங்கி, அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில் வேலை செய்த பரத் (30), சதீஷ் (30), சக்திவேல் (27), பிரகாஷ் (27) ஆகியோர், சயீத் சதாம் அறையிலேயே தங்கினர். அப்போது சயீத் சதாம், தன்னுடன் தங்கிய  4 பேருக்கு விலை உயர்ந்த செல்போன் வாங்கி தருவதாக 1 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும்,  சயீத் சதாமை அறையில் அடைத்து சரமாரியாக தாக்கியதில், அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, 4 பேரும் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 4 பேரையும் கடந்த 6 ஆண்டாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தி.நகரில் பரத்தையும், மூலக்கடையில் சதீஷையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர்,  அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சக்திவேல், பிரகாஷ் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

🔊 Listen to this சென்னை: வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சயீத் சதாம் (25), கடந்த 2015ம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் வாடகை வீட்டில் தங்கி, அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில் வேலை செய்த பரத் (30), சதீஷ் (30), சக்திவேல் (27), பிரகாஷ் (27) ஆகியோர், சயீத் சதாம் அறையிலேயே தங்கினர். அப்போது சயீத் சதாம், தன்னுடன் தங்கிய  4 பேருக்கு விலை உயர்ந்த செல்போன் வாங்கி தருவதாக…