வானிலிருந்து விழுந்த மீன்கள்… டெக்ஸாஸ் மக்கள் ஆச்சர்யம்..!

  • 4

நம் ஊரில் வானத்திலிருந்து‌ ஆலங்கட்டி மழை விழுவதையே‌ நாம் அதிசயமாகப் பார்ப்போம். ஆனால் வானத்தில் ‌இருந்து மீன்கள் மழையாகக் கொட்டினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு‌ சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டெக்ஸார்கானா (Texarkana) என்ற ஊரில் மீன்கள் வானிலிருந்து ‌மழை போல விழுந்திருக்கின்றன. மீன்கள் எப்படி வானிலிருந்து வரும் என உங்களுக்குச் சந்தேகம் வரும். உண்மையில் மீன்கள் வானத்தில் இருப்பவை இல்லைதான். ஏரி அல்லது குளங்களின் மேல் நீர்த்தாரை ஏற்படும் போது அந்த நீர் சுழற்சியில் இந்த மீன்கள் உள்ளிழுக்கப்படுமாம். அந்த நேரத்தில் நீர்த்தாரையோடு அதிகமாகக் காற்று அடிக்க ஆரம்பித்து இந்த சுழற்சியில் மீன்கள் பறக்க ஆரம்பிக்கும். பின்னர் சிறிது நேரம் கழித்து சுழற்சியின் வேகம் குறைந்ததும் மீன்கள் கீழே விழத் தொடங்கும். இப்படி விழுவதே மழை பொழிவது போல் தோன்றும்.

இப்படி நிகழ்வது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு. சரியான சூழ்நிலை அமைந்தால் மட்டுமே இப்படியான நிகழ்வுகள் நடக்கும். நீர் சுழலின் வேகம் மீன்களை எடையைத் தூக்கும் அளவிற்கு இருக்க வேண்டும் மற்றும்‌‌ மீன்களும் பறக்கும் அளவிற்கு எடை குறைவாக இருக்க வேண்டும்.

டெக்ஸாஸில் கடந்த வியாழக்கிழமை பெய்த இந்த மீன் மழையைக் கண்ட டெக்ஸாஸ் வாசிகள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். தங்கள் வீடுகளின் அருகில் விழுந்த மீன்களைப் படங்கள் எடுத்து அதை முகநூலில் பகிரத் தொடங்கினர். டெக்சாஸ் வாசி ஒருவர் ,”இன்னைக்கு தெருவில் உள்ள பூனைகளுக்கு நல்ல விருந்துதான்” என்று பதிவிட்டிருக்கிறார். மற்றொருவர்,”இப்படி வானத்தில் ‌இருந்து மீன்கள் கொட்டுவதைப் பார்த்து முதலில் உலகம் தான் அழிந்து விட்டதோ என நினைத்தேன்.” எனப் பதிவிட்டிருக்கிறார். பலர் இந்த நிகழ்வு குறித்து வியந்தாலும் இப்படி இறந்து விழுந்த மீன்கள் சரியாகச் சுத்தம் செய்யப்படாமல் போனால் நோய்த்தொற்று ஏற்படக் காரணமாக ‌அமையும் என‌ச் சிலர் தங்கள் அச்சத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

நீர்த்தாரை

இப்படி விலங்குகள் ‌மழையாக விழுவதை விலங்கு மழை (Animal rain) என்று அழைக்கின்றனர். மீன்கள் மட்டுமல்ல இதே போலவே தவளைகள், பாம்புகள் மற்றும் நண்டுகள் என எந்த சிறிய‌ விலங்கு வேண்டுமானாலும் மழையாகப் பொழிய வாய்ப்பு இருக்கிறதாம். ஏற்கெனவே இப்படிப்பட்ட விலங்கு மழையாகப் பொழிந்த சம்பவம் கலிஃபோர்னியாவிலும், வடமேற்கு சைபிரியாவிலும் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏன்‌ நமது நாட்டில் கூட 2019 ஆம் ஆண்டு கேரளாவில் இதே போல ஒரு முறை மீன் மழை பொழிந்திருக்கிறதே.

🔊 Listen to this நம் ஊரில் வானத்திலிருந்து‌ ஆலங்கட்டி மழை விழுவதையே‌ நாம் அதிசயமாகப் பார்ப்போம். ஆனால் வானத்தில் ‌இருந்து மீன்கள் மழையாகக் கொட்டினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு‌ சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டெக்ஸார்கானா (Texarkana) என்ற ஊரில் மீன்கள் வானிலிருந்து ‌மழை போல விழுந்திருக்கின்றன. மீன்கள் எப்படி வானிலிருந்து வரும் என உங்களுக்குச் சந்தேகம் வரும். உண்மையில் மீன்கள் வானத்தில் இருப்பவை இல்லைதான். ஏரி அல்லது குளங்களின்…

🔊 Listen to this நம் ஊரில் வானத்திலிருந்து‌ ஆலங்கட்டி மழை விழுவதையே‌ நாம் அதிசயமாகப் பார்ப்போம். ஆனால் வானத்தில் ‌இருந்து மீன்கள் மழையாகக் கொட்டினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு‌ சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டெக்ஸார்கானா (Texarkana) என்ற ஊரில் மீன்கள் வானிலிருந்து ‌மழை போல விழுந்திருக்கின்றன. மீன்கள் எப்படி வானிலிருந்து வரும் என உங்களுக்குச் சந்தேகம் வரும். உண்மையில் மீன்கள் வானத்தில் இருப்பவை இல்லைதான். ஏரி அல்லது குளங்களின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *