“வடமாநிலங்களில் மும்மொழித் திட்டம் பின்பற்றப்படவில்லை!” – ஆளுநர் கருத்துக்கு பழ.நெடுமாறன் எதிர்ப்பு

  • 4

இந்தி மொழியை தமிழக மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக ஆளுநர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பேசியுள்ளதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்தி மொழி

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவின் பிற மாநில மாணவர்கள் தங்கள் தாய்மொழியைத் தவிர, பிற மாநில மொழிகளைக் கற்கிறார்கள், அதைபோல தமிழக மாணவர்கள் இந்தி உள்பட பிற மாநில மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக ஆளுநர் கூறியுள்ளார்.

அதைபோலவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியும் தமிழ்நாட்டு மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தோடு மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதன்மூலம் பிற மாநிலங்களில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் ரவி

இந்தியாவின் தலைமை அமைச்சராக லால்பகதூர் சாஸ்திரி இருந்தபோது, இந்தி, ஆங்கிலம், மாநிலங்களின் தாய்மொழி ஆகிய மூன்று மொழிகளை அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் கற்கவேண்டும் என சட்டம் கொண்டுவந்தார்.

அதாவது, வட இந்திய மாணவர்கள் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் தென்னிந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ளவேண்டும். தமிழக மாணவர்களும் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்கவேண்டும் என்றும் கூறினார். ஆனால், இதுவரை வடஇந்திய மாநிலங்களில் எந்தவொரு மாநிலத்திலும் மும்மொழித் திட்டம் பின்பற்றப்படவில்லை. தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் ஒரு மொழியைக் கூட வடஇந்திய மாணவர்கள் கற்க இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை.

இந்த உண்மையை அறியாமல் தமிழக ஆளுநரும், தலைமை நீதிபதியும் தமிழக மாணவர்களை மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரைக் கூறியிருப்பது நகைப்புக்குரியதாகும்.

பழ. நெடுமாறன்

தமிழக மாணவர்கள் இந்தி படித்தால் பிற மாநிலங்களில் வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்று கூறுவதும் வேடிக்கையானதாகும். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் அங்கு வேலைவாய்ப்பில்லாமல் தமிழ்நாட்டில் வேலை பார்க்கிறார்கள். மேலும் இந்தியில் பட்டம் பெற்றவர்கள் லட்சக்கணக்கில் வேலை வாய்ப்பில்லாமல் இந்தி மாநிலங்களில் தவிக்கிறார்கள் என்பது போன்ற உண்மைகளை உணராமல் பேசுவது தமிழக மாணவர்களுக்குத் தவறான வழிகாட்டுதல்களாக அமையும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

AIARA

🔊 Listen to this இந்தி மொழியை தமிழக மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக ஆளுநர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பேசியுள்ளதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தி மொழி இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவின் பிற மாநில மாணவர்கள் தங்கள் தாய்மொழியைத் தவிர, பிற மாநில மொழிகளைக் கற்கிறார்கள், அதைபோல தமிழக மாணவர்கள் இந்தி உள்பட பிற மாநில மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக…

AIARA

🔊 Listen to this இந்தி மொழியை தமிழக மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக ஆளுநர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பேசியுள்ளதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தி மொழி இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவின் பிற மாநில மாணவர்கள் தங்கள் தாய்மொழியைத் தவிர, பிற மாநில மொழிகளைக் கற்கிறார்கள், அதைபோல தமிழக மாணவர்கள் இந்தி உள்பட பிற மாநில மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக…

Leave a Reply

Your email address will not be published.