வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: டெவன் சதத்தால் நிமிர்ந்த நியூசி.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: டெவன் சதத்தால் நிமிர்ந்த நியூசி.

மவுன்ட் மவுங்கானுயி: வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டெவன் கான்வேயின் அதிரடி சதத்தால் நிமிர்ந்த நியூசிலாந்து 5 விக்கெட இழப்புக்கு 258ரன் குவித்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 ஆட்டங்களை கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிட் தொடரில் விளையாடுகிறது.முதல் டெஸ்ட் ஆட்டம் நேற்று மவுன்ட் மவுங்கானுயில் தொடங்கியது.  புத்தாண்டின் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியான இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை  தேர்வு செய்தது.  கேப்டன் கேன் வில்லியம்சன் ஓய்வில் இருப்பதால்  டாம் லாதம் தலைமையில் நியூசி அணி களமிறங்கியது. லாதம்  ஒரு ரன்னில் வெளியேற்றி புத்தாண்டின் முதல் விக்கெட்டை ஷோரிபுல் கைப்பற்றினார்.  அடுத்த இணை சேர்ந்த  வில் யங், டெவன் கான்வே பொறுப்புடன் விளையாடி 2 வது விக்கெட்டுக்கு 138ரன் சேர்த்தனர். அரைசதம் விளாசிய யங் 52ரன்னில்  ரன் அவுட்டானார். ஓய்வை அறிவித்துள்ள ராஸ் டெய்லர் 31ரன் எடுத்து வெளியேறினார். இன்னொருப் பக்கம் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த கான்வே சதம் அடிக்க ஸ்கோர் உயர்ந்தது. புத்தாண்டின் முதல் சிக்சர், முதல் சதத்தை விளாசி  122 (227ரன், 16பவுண்டரி, 1சிக்சர்) ரன் எடுத்திருந்த டெவனையும்,  ஷோரிபுல் பெவிலியனுக்கு அனுப்பினார். டாம்  பிளண்டெல் 11 ரன்னில்  ஆட்டமிழக்க, வெளிச்சமின்மை காரணமாக முதல்  நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது நியூசி முதல் இன்னிங்சில் 87.3ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 258 ரன் எடுத்திருந்தது.  ஹென்றி நிகோலஸ் 32*ரன்னுடன் களத்தில் உள்ளார். வங்கதேசம் தரப்பில்  ஷோரிபுல் இஸ்லாம் 2, ஹோசைன், மொமினுல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இன்னும் 5 விக்கெட்கள் கைவசம் இருக்க நியூசி 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர்கிறது.

AIARA

🔊 Listen to this மவுன்ட் மவுங்கானுயி: வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டெவன் கான்வேயின் அதிரடி சதத்தால் நிமிர்ந்த நியூசிலாந்து 5 விக்கெட இழப்புக்கு 258ரன் குவித்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 ஆட்டங்களை கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிட் தொடரில் விளையாடுகிறது.முதல் டெஸ்ட் ஆட்டம் நேற்று மவுன்ட் மவுங்கானுயில் தொடங்கியது.  புத்தாண்டின் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியான இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை  தேர்வு…

Leave a Reply

Your email address will not be published.