வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்; நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 328 ரன்னில் ஆல்அவுட்

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்; நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 328 ரன்னில் ஆல்அவுட்

மவுன்ட் மாங்கானு: வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் நேற்று மவுன்ட் மாங்கானுவில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் வான்வே 122, வில்யங் 52 ரன் எடுத்தனர். நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 87.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன் எடுத்திருந்தது.2வது நாளான இன்று அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த நியூசிலாந்து 108.1 ஓவரில் 328 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. ஹென்றி நிக்கோல்ஸ் 75 ரன் அடித்தார். வங்கதேச பந்துவீச்சில், ஷோரிஃபுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து வங்கதேசம் முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில், ஷத்மான் இஸ்லாம் 22 ரன்னில் வால்க்னர் பந்தில் கேட்ச் ஆனார். 46 ஓவரில் வங்கதேசம் ஒரு விக்கெட் இழப்பிற்கு 115 ரன் எடுத்திருந்தது. மஹ்முதுல் ஹசன் ஜாய் 46, நஜ்முல் ஹொசைன் சாண்டோ 43 ரன்னில் களத்தில் இருந்தனர்.

🔊 Listen to this மவுன்ட் மாங்கானு: வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் நேற்று மவுன்ட் மாங்கானுவில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் வான்வே 122, வில்யங் 52 ரன் எடுத்தனர். நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 87.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *