ரூ.200 கோடி வழக்கு: துபாய் செல்ல முயன்ற நடிகை ஜாக்குலின் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

பிரபல மருந்து கம்பெனி உரிமையாளரின் மனைவியிடம் ரூ.200 கோடி மிரட்டிப் பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகரும், அவரின் கூட்டாளிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஜாக்குலினை நேரில் அழைத்து விசாரித்தனர். ஆரம்பத்தில் ஜாக்குலின் இந்த மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், தானும் இதில் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அடுத்தடுத்த விசாரணையில் ஜாக்குலினுக்கு சுகேஷ் கோடிக்கணக்கில் பரிசுப்பொருள்களைக் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. ரூ.200 கோடி மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் சுகேஷ், அவரின் கூட்டாளிகள் மீது அமலாக்கப் பிரிவு 7,000 பக்கங்கள்கொண்ட குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. அதில் நடிகை ஜாக்குலினுக்கு 10 கோடி ரூபாய் அளவுக்கு சுகேஷ் பரிசுப்பொருள்களை வாங்கிக்கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

இந்தக் குற்றப்பத்திரிக்கையைத் தொடர்ந்து ஜாக்குலினுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரசேகருக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கும் இடையே பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் துபாயில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்படத் திட்டமிட்டிருந்தார். ஆனால் மும்பை விமான நிலையத்தில் ஜாக்குலின் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரூ.200 கோடி மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் ஜாக்குலினுக்கு எதிராகத் தேடுதல் நோட்டீஸ் (லுக்அவுட் சர்க்குலர்) வெளியிட்டுள்ளனர். இதனால் ஜாக்குலின் துபாய் செல்வதை மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிட்டனர். ஜாக்குலினுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து இன்னும் விசாரிக்கப்பட வேண்டியிருப்பதால் அவர் வெளிநாடு செல்ல அனுமதிப்பது சரியாக இருக்காது என்று கருதி இந்த நோட்டீஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. ஜாக்குலினை மும்பை விமான நிலையத்தில் பிடித்த அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணைக்காக டெல்லிக்குக் கொண்டு சென்றுள்ளனர். விசாரணைக்குப் பிறகு கைதுசெய்யப்படுவாரா என்பது இனிதான் தெரியவரும். சமீபத்தில் ஜாக்குலினும், சுகேஷ் சந்திரசேகரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

🔊 Listen to this பிரபல மருந்து கம்பெனி உரிமையாளரின் மனைவியிடம் ரூ.200 கோடி மிரட்டிப் பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகரும், அவரின் கூட்டாளிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஜாக்குலினை நேரில் அழைத்து விசாரித்தனர். ஆரம்பத்தில் ஜாக்குலின் இந்த மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், தானும் இதில் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அடுத்தடுத்த விசாரணையில் ஜாக்குலினுக்கு சுகேஷ்…