ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு; தலைமறைவான விஜய நல்லதம்பி கைது!

  • 3

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன், அ.தி.மு.க முன்னாள் ஒன்றியச் செயலாளர் விஜய நல்லதம்பி மீது புகார் அளித்தார். ஆனால், ’ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவளித்த பணத்தை திருப்பித் தராமலும் ரூ.3 கோடி வரை பண மோசடி செய்துள்ளார்’ என ராஜேந்திர பாலாஜி மீது விஜய நல்லதம்பி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகார், வழக்காக பதிவு செய்யப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு, கடந்த 17-ம் தேதி தள்ளுபடியானது. அதே நாளில் தி.மு.க அரசைக் கண்டித்து விருதுநகரில் நடந்த அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் முடிந்ததும் காரில் ஏறிச் சென்று தலைமறைவானார்.

பின்னர், 16 நாள்களுக்குப் பிறகு கர்நாடக மாநிலம் ஹசனில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், “இதே போன்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் 21 பண மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், போலீஸார் திட்டமிட்டே ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு விசாரணையிலும், கைது நடவடிக்கையிலும் ஆர்வம் காட்டினார்கள். சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் ஆவினில் வேலை வாங்கித் தர, அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி விஜய நல்லதம்பியிடம்தான் பணம் கொடுத்தோம்.

விஜய நல்லதம்பி

ராஜேந்திர பாலாஜியை நேரில் சந்திக்கவும் இல்லை. அவரிடம் பணம் கொடுக்கவும் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். ஆனால், இதில் நேரடியாகக் குற்றம்சாட்டப்பட்ட விஜய நல்லதம்பியை கைது செய்ய போலீஸார் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை” என மீடியாக்களில் கூறினர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர்கள்.

இந்த நிலையில், 30 நாள்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த விஜய நல்லதம்பியை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீஸார், ஏழாயிரம்பண்ணை – புளியங்குளம் இடையிலான காட்டுப்பகுதியில் செவல்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவருடன் இன்று காலை சுமார் 6 மணியளவில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது கைது செய்துள்ளனர்.

ராஜேந்திர பாலாஜி

போலீஸார் விஜய நல்லதம்பியின் செல்போன் சிக்னலை வைத்து புளியங்குளம் காட்டுப்பகுதியில் சுற்றி வளைத்து கைது செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விஜய நல்லதம்பி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ராஜேந்திர பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விஜய நல்லதம்பியிடம் விசாரணை நடத்தப்பட்டால் பல உண்மைகள் தெரிய வரும் என்கிறார்கள் கட்சியில் விவரமறிந்தவர்கள்.

Also Read: `மாலை, சால்வை வேண்டாம்; வண்டியில ஏறுங்க..!’ – கட்சி நிர்வாகிகளைத் தவிர்க்கிறாரா ராஜேந்திர பாலாஜி?

AIARA

🔊 Listen to this ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன், அ.தி.மு.க முன்னாள் ஒன்றியச் செயலாளர் விஜய நல்லதம்பி மீது புகார் அளித்தார். ஆனால், ’ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவளித்த பணத்தை திருப்பித் தராமலும் ரூ.3 கோடி வரை பண மோசடி செய்துள்ளார்’ என ராஜேந்திர பாலாஜி மீது விஜய நல்லதம்பி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு…

AIARA

🔊 Listen to this ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன், அ.தி.மு.க முன்னாள் ஒன்றியச் செயலாளர் விஜய நல்லதம்பி மீது புகார் அளித்தார். ஆனால், ’ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவளித்த பணத்தை திருப்பித் தராமலும் ரூ.3 கோடி வரை பண மோசடி செய்துள்ளார்’ என ராஜேந்திர பாலாஜி மீது விஜய நல்லதம்பி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு…

Leave a Reply

Your email address will not be published.