யானை சாணத்தில் மாஸ்க், பிளாஸ்டிக் குவியல்கள்; வனத்தில் ஆய்வு செய்தபோது அதிர்ச்சி!

  • 8

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதால் கோவை மாவட்டத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும். காடுகளில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றத்தால், கடந்த சில ஆண்டுகளாக யானைகள் உணவு, தண்ணீரை தேடி வெளியில் வருவது அதிகமாகிவிட்டது.

கோவை யானை

Also Read: மின்சாரம் தாக்கி உயிரிழந்த குட்டி; தட்டி எழுப்ப முயற்சி செய்த தாய் யானை; உருகவைத்த வீடியோ!

இதனால் யானைகளின் உணவுப் பழக்க வழக்கம், குணாதிசயங்களில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. சமீபத்தில் வெளியான ஓர் வீடியோ அந்தப் பிரச்னையை தெளிவாக உணர்த்தும்.

கோவை மருதமலை பகுதியை சுற்றி காட்டு யானைகள் எப்போதுமே நடமாடிக் கொண்டிருக்கும். மருதமலை அடிவாரம் வரை மக்கள் குடியமர்ந்ததாலும், கோயிலுக்கு பொது மக்கள் அதிகம் வருவதாலும் பசுமை காட்டை குப்பைகள் ஆக்கிரமிக்க தொடங்கின. வன உயிரின ஆர்வலர்கள் சிலர் மருதமலை பகுதியை ஆய்வு செய்தனர்.

யானை சாணத்தில் பால் கவர்

அப்போது யானை சாணத்தில் இருந்து, பால் கவர், மாஸ்க், மசாலா கவர், பிஸ்கெட் கவர், ரிப்பன், நாப்கின், பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருள்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து வன உயிரின ஆர்வலர் முருகானந்தம் கூறுகையில், “2 ஆண்டுகளுக்கு முன்பு மருதமலை அருகே சோமையம்பாளையம் பகுதியில் எங்கள் எதிர்ப்பை மீறி குப்பை கிடங்கு அமைத்தனர். வனத்துறை நோட்டீஸ் அனுப்பியும் கூட, குப்பை கிடங்கை அகற்ற முடியவில்லை.

முருகானந்தம்

சுமார் 300 கிராம் எடை கொண்ட பிளாஸ்டிக் கழிவுகளை யானை சாணத்தில் கண்டோம். கடந்த ஒரு வாரமாகவே 5 யானைகள் கொண்ட கூட்டம் இங்கு சுற்றிக் கொண்டிருக்கின்றன. அப்படி வரும்போது பிளாஸ்டிக் குப்பைகளை சாப்பிட்டிருக்கலாம்.

யானை மட்டுமல்ல, இங்கு மான், காட்டு எருமை, காட்டு பன்றி போன்ற ஏராளமான விலங்குகள் சுற்றும். இந்த நிலை தொடரும் பட்சத்தில் அது யானை உள்ளிட்ட விலங்குகளின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படும்.

யானை சாணத்தில் மாஸ்க்

Also Read: தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த யானை; பின்னணியில் வேட்டை கும்பலா?

காடுகளை விதைக்கும் யானைகளை, பிளாஸ்டிக் கழிவுகளை சுமக்க வைக்கும் நிலையை ஒழிக்க வேண்டும். அந்தக் குப்பை கிடங்கை அகற்றி வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

🔊 Listen to this மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதால் கோவை மாவட்டத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும். காடுகளில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றத்தால், கடந்த சில ஆண்டுகளாக யானைகள் உணவு, தண்ணீரை தேடி வெளியில் வருவது அதிகமாகிவிட்டது. கோவை யானை Also Read: மின்சாரம் தாக்கி உயிரிழந்த குட்டி; தட்டி எழுப்ப முயற்சி செய்த தாய் யானை; உருகவைத்த வீடியோ! இதனால் யானைகளின் உணவுப் பழக்க வழக்கம், குணாதிசயங்களில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க…

🔊 Listen to this மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதால் கோவை மாவட்டத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும். காடுகளில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றத்தால், கடந்த சில ஆண்டுகளாக யானைகள் உணவு, தண்ணீரை தேடி வெளியில் வருவது அதிகமாகிவிட்டது. கோவை யானை Also Read: மின்சாரம் தாக்கி உயிரிழந்த குட்டி; தட்டி எழுப்ப முயற்சி செய்த தாய் யானை; உருகவைத்த வீடியோ! இதனால் யானைகளின் உணவுப் பழக்க வழக்கம், குணாதிசயங்களில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *