முழு ஊரடங்கு: சைக்கிளில் ரோந்து; சாலையில் சுற்றித் திரிந்தவர்களை கண்டித்த புதுக்கோட்டை ஆட்சியர்!

  • 5

தமிழகம் முழுவதுமே கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கை அமல்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு தினத்தில், ஆங்காங்கே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நகர்ப்பகுதி துவங்கி புறநகர்ப் பகுதி வரையிலும் சாலைகள் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

Also Read: ஞாயிறு முழு ஊரடங்கு; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; முக்கிய இடங்கள் #Spotvisit புகைப்படத் தொகுப்பு…

ஆனாலும், ஊரடங்கையும் மீறி ஆங்காங்கே சிலர் வெளியில் சுற்றித் திரிந்தனர். அப்படித் திரிபவர்களுக்குப் போலீஸார் அபராதம் விதித்தனர்.

இந்நிலையில், மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நகரின் முக்கிய வீதிகளில் சைக்கிளில் சென்று பார்வையிட்டார்.

கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையம், கீழராஜ வீதி, பிருந்தாவனம், வடக்குராஜ வீதி, கலெக்டர் அலுவலக சாலை, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் சைக்கிளில் சென்றபடியே பார்வையிட்டார். புதிய பேருந்து நிலையம் அருகே வந்தபோது, காவல்துறையினர் முறையாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனரா என்பதைத் தெரிந்துகொண்டு, அங்கிருந்த காவலர்கள் கையில் வைத்திருந்த அபராத புத்தகத்தினை வாங்கிப் பார்த்து, எத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்துக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

Also Read: Doctor Vikatan: S gene-க்கும் ஒமிக்ரான் தொற்றுக்கும் என்ன தொடர்பு?

தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம் அருகே முகக்கவசம் இல்லாமல் வந்த இளைஞர்கள் இருவரைக் கண்டதும் தன் சைக்கிளை நிறுத்தி, முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து அவர்களுக்கு வலியுறுத்தியவர், இருவருக்கும் மாஸ்க் வழங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

சுமார் 2 மணி நேரம், 4 கி.மீ தொலைவிற்குச் சைக்கிளில் சென்று மாவட்ட ஆட்சியர் ஊரடங்கை பார்வையிட்டதும், விழிப்புணர்வு ஏற்படுத்தியதும் மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

AIARA

🔊 Listen to this தமிழகம் முழுவதுமே கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கை அமல்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு தினத்தில், ஆங்காங்கே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நகர்ப்பகுதி துவங்கி புறநகர்ப் பகுதி வரையிலும் சாலைகள் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டன. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு Also Read: ஞாயிறு முழு ஊரடங்கு; வெறிச்சோடிய…

Leave a Reply

Your email address will not be published.