மும்பை: 15 ஆண்டுகளாகத் தேடப்பட்டுவந்த கேங்ஸ்டர்… பிலிப்பைன்ஸில் கைதாகி இந்தியாவுக்கு நாடு கடத்தல்

மும்பையிலும், அதன் புறநகர்ப் பகுதியிலும் உள்ள பில்டர்கள், தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறித்துவந்த சுரேஷ் புஜாரி கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தார். அவர் மீது மும்பை, அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் 23-க்கும் அதிகமான வழக்குகள் இருக்கின்றன. 2017, 18-ம் ஆண்டுகளில் அவரைக் கைதுசெய்ய சர்வதேச அளவில் ரெட் அலர்ட் நோட்டீஸ் விடப்பட்டிருந்தது. சமீபத்தில் சுரேஷ் புஜாரி பிலிப்பைன்ஸ் நாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டு போலீஸார் புஜாரியைக் கைதுசெய்தனர். புஜாரியை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர சி.பி.ஐ தேவையான நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து புஜாரி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது சி.பி.ஐ அதிகாரிகள் புஜாரியைக் கைதுசெய்து தங்களது கட்டுப்பாட்டில் எடுத்தனர். விசாரணைக்குப் பிறகு அவரை மும்பை போலீஸாரிடம் ஒப்படைக்க சி.பி.ஐ முடிவு செய்துள்ளது.

கைது

மும்பையிலிருந்து தனிப்படை போலீஸார் ஏற்கெனவே புஜாரியைத் தங்களது கட்டுப்பாட்டில் எடுக்க டெல்லிக்குச் சென்றுள்ளனர். சுரேஷ் புஜாரி ஆரம்பத்தில் ரவி புஜாரி, சோட்டா ராஜனிடம் வேலை பார்த்துவந்தார். 2007-ம் ஆண்டு ரவி புஜாரியிடமிருந்து தனியாகப் பிரிந்து தனக்கென தனிக்கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு கிரிமினல் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து கொண்டு மும்பையில் தனது ஆட்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற குற்றச்செயல்களில் அவர் ஈடுபட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

AIARA

🔊 Listen to this மும்பையிலும், அதன் புறநகர்ப் பகுதியிலும் உள்ள பில்டர்கள், தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறித்துவந்த சுரேஷ் புஜாரி கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தார். அவர் மீது மும்பை, அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் 23-க்கும் அதிகமான வழக்குகள் இருக்கின்றன. 2017, 18-ம் ஆண்டுகளில் அவரைக் கைதுசெய்ய சர்வதேச அளவில் ரெட் அலர்ட் நோட்டீஸ் விடப்பட்டிருந்தது. சமீபத்தில் சுரேஷ் புஜாரி பிலிப்பைன்ஸ் நாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த அக்டோபர்…