`மீண்டும் மாம்பழங்களை அனுப்பலாம்!’ – ஓராண்டுக்குப் பிறகு இந்திய பழங்களுக்கு அனுமதி அளித்த அமெரிக்கா

  • 4

இந்தியாவில் விளையும் மாம்பழங்களுக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. குறிப்பாக அல்போன்சா, இமாம் பசந்த், பங்கனப்பள்ளி, கேசர் உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாம்பழ உற்பத்தியில் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருந்து வருகின்றன. இந்திய மாம்பழங்கள் அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் என பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

மாம்பழம்

Also Read: மிளகாய் ஏற்றுமதி; கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? | Chilli Export | Nanayam Vikatan

அந்த வகையில் அமெரிக்காவுக்கும் ஆண்டுக்கு 800-1000 டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. 2020-ம் ஆண்டு கொரோனா பரவலுக்கு பிறகு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா. காரணம், யு.எஸ்.டி.ஏ (United States Department of Agriculture – USDA) என்றழைக்கப்படும் அமெரிக்க வேளாண்துறை ஒவ்வொரு நாட்டிலிருந்து அனுப்பப்படும் வேளாண் விளைபொருள்களை ஆய்வு செய்வது வழக்கம்.

அமெரிக்க வேளாண் துறையின் சோதனை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நாட்டுக்குச் சென்று ஆய்வு செய்து உரிய தரத்துக்கு இருந்தால் மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதியளிப்பார்கள். அந்த வகையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆய்வு செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் இந்திய மாம்பழ ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

Mango

Also Read: இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்ட வரலாறு!| இன்று ஒன்று நன்று – 10!

இதையடுத்து கடந்த 2021, நவம்பர் மாதம் இந்திய மாம்பழங்களைத் தங்கள் நாட்டில் இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. எனவே அடுத்து வரும் மாம்பழ சீசனில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்யலாம். இதேபோல இந்தியாவில் விளையும் மாதுளை பழங்களையும் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வர்த்தக கொள்கை அமைப்புடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவில்லிருந்து செர்ரி பழங்கள், அல்பால்பா ஹே போன்றவற்றை இறக்குமதி செய்ய இந்தியாவும் ஒப்பந்தம் செய்துள்ளது.

🔊 Listen to this இந்தியாவில் விளையும் மாம்பழங்களுக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. குறிப்பாக அல்போன்சா, இமாம் பசந்த், பங்கனப்பள்ளி, கேசர் உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாம்பழ உற்பத்தியில் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருந்து வருகின்றன. இந்திய மாம்பழங்கள் அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் என பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மாம்பழம் Also Read: மிளகாய் ஏற்றுமதி; கவனிக்க வேண்டிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *