மானாமதுரை அருகே சுங்கச்சாவடியில் இருமடங்கு கட்டணம்: மாற்றுப்பாதையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள்

ராமநாதபுரம்: மானாமதுரை அருகே சுங்கச்சாவடியில் இருமடங்கு கட்டணம் வசூலிப்பதால் வாகனஓட்டிகள் கிராமங்கள் வழியாக மாற்றுப்பாதையில் செல்கின்றனர். அந்தப்பாதையிலும் சுங்கச்சாவடி நிர்வாகம்  சோதனைச்சாவடி அமைத்ததால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரையிலான நான்கு வழிச் சாலையில் திருப்பாச்சேத்தி போகலூர் ஆகிய 2 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு ஃபாஸ்ட் டிராக் இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.இதனால் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர், ஏர்வாடி, இளையன்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு காய்கறி, பழங்கள், பல சரக்கு பொருட்கள் உள்ளிட்டவைகளை ஏற்றிச்செல்லும் லாரிகள் மற்றும் வாகனங்கள் சுங்கச்சாவடியை தவிர்த்து மாற்றுப் பாதையில் செல்கிறன. தூதை, மாரநாடு, ஆவரங்காடு உள்ளிட்ட கிராமச்சாலைகளை பயன்படுத்துவதால் இந்த சாலைகளிலும் சோதனைச்சாவடி அமைத்து சுங்கச்சாவடி நிர்வாகம் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்திருக்கும் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியில் இருமடங்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். கிராமச் சாலைகளில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் சுங்கச்சாவடி அமைத்து உள்ளுர் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் சுங்கக் கட்டணங்கள் தாறுமாறாக வசூலிக்கப்படுவதால் சரக்கு வாகன உரிமையாளர்கள் தவித்து வரும் நிலையில் கட்டணத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் சோதனைச் சாவடி அமைத்திருப்பது பெரும் கண்டனத்திற்கு உரியது என்று பலரும் தெரிவித்துள்ளனர்.         

🔊 Listen to this ராமநாதபுரம்: மானாமதுரை அருகே சுங்கச்சாவடியில் இருமடங்கு கட்டணம் வசூலிப்பதால் வாகனஓட்டிகள் கிராமங்கள் வழியாக மாற்றுப்பாதையில் செல்கின்றனர். அந்தப்பாதையிலும் சுங்கச்சாவடி நிர்வாகம்  சோதனைச்சாவடி அமைத்ததால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரையிலான நான்கு வழிச் சாலையில் திருப்பாச்சேத்தி போகலூர் ஆகிய 2 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு ஃபாஸ்ட் டிராக் இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.இதனால் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர்,…