மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் மீது போக்ஸோ வழக்கு

திருநெல்வேலி சிஎஸ்ஐ கிறிஸ்தவ திருமண்டல நிர்வாகத்தின்கீழ், திசையன்விளை அருகே குலசேகரன்விளையில் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமையாசிரியராக கிறிஸ்டோபர் ஜெயக்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தெரிவித்துள்ளார். மாணவிகளும் இதில் பங்கேற்றனர்.

அப்போது, சில மாணவிகளுக்கு இவர் பாலியல்ரீதியாக தொல்லைகொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து, பெற்றோர்கள் சிலர், பள்ளித் தாளாளரிடம் புகார் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தியது. புகார் உறுதியானதால், தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமாரை, திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல மேல்நிலைப் பள்ளி நிர்வாக மேலாளர் புஷ்பராஜ் பணியிடை நீக்கம் செய்தார். கிறிஸ்டோபர் ஜெயக்குமார் மீது, போக்ஸோ சட்டத்தின்கீழ் திசையன்விளை போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனர்.

AIARA

🔊 Listen to this திருநெல்வேலி சிஎஸ்ஐ கிறிஸ்தவ திருமண்டல நிர்வாகத்தின்கீழ், திசையன்விளை அருகே குலசேகரன்விளையில் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமையாசிரியராக கிறிஸ்டோபர் ஜெயக்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தெரிவித்துள்ளார். மாணவிகளும் இதில் பங்கேற்றனர். அப்போது, சில மாணவிகளுக்கு இவர் பாலியல்ரீதியாக தொல்லைகொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து, பெற்றோர்கள் சிலர், பள்ளித் தாளாளரிடம் புகார் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் விசாரணை…

Leave a Reply

Your email address will not be published.