மழையால் வீணாகும் நெல் மூட்டைகள்; அதிகாரிகளின் அலட்சியத்தால் வேதனையில் விவசாயிகள்!

கும்பகோணம் அருகே அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பான முறையில் நெல் மூட்டைகள் வைக்கப் படாததால் கடந்த சில தினங்களாகப் பெய்த மழையில் சுமார் 40,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. இதில் சுமார் ரூ.1 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படும் என்றும், பாடுபட்டு விளைவித்த நெல்லைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வீணாகும் நெல் மூட்டைகள்

Also Read: 80 நாட்களாக கொள்முதல் செய்யப்படாத 4,000 மூட்டை நெல்; வீணான 1000 மூட்டைகள்; கவலையில் விவசாயிகள்!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த மழையில் நெற் பயிர்கள், மார்கழி பட்டத்தில் போடப்பட்டிருந்த கடலை பயிர்கள் போன்றவை நீரில் மூழ்கிவிட்டன. ஆயிரகணக்கான ஏக்கர் பயிர்கள் பாதிப்படைந் திருப்பதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு விவசாயிகள் குறுவை சாகுபடி செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து அரசு சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைத்திருந்தனர். கும்பகோணம், திருநாகேஸ்வரம் அருகே உள்ள சன்னாபுரம் கிராமத்தில் வேளாண் துறைக்குச் சொந்தமான திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மழை நீரில் கிடக்கும் நெல் மணிகள்

இது குறித்து விவசாயிகள் சிலரிடம் பேசினோம். “கடந்த ஆண்டு கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் பகுதிகளில் சுமார் 22,000 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்திருந்தனர். இதையடுத்து அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம் 3,48,000 டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.

கும்பகோணம், சோழன் மாளிகை, சுவாமிமலை, திருப்புறம்பியம், பட்டீஸ்வரம், தாராசுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட குறுவை நெல் மூட்டைகள் அனைத்தும் திருவிடைமருதூரில் உள்ள நெல் சேமிப்புக் கிடங்குக்குக் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து ரயில்கள், லாரிகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்படும்.

இந்நிலையில், திருவிடைமருதூர் நெல் சேமிப்புக் கிடங்கில் போதிய இடவசதி இல்லாததால் திருநாகேஸ்வரம், சன்னாபுரம் கிராமத்தில் உள்ள திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. இந்த நெல் மூட்டைகள் மேல் பகுதியில் மழையில் நனையாமல் இருப்பதற்காக தார்ப்பாய்கள் கொண்டு போர்த்தி வைத்திருந்தனர்.

கிழிந்த சாக்கு மற்றும் தார்ப்பாய்

தரமற்ற தார்ப்பாய்களைக் கொண்டு மூடியிருந்ததால் அடுத்த சில வாரங்களிலேயே கிழிந்து சேதமடைந்தன. ஊழியர்கள் அதைக் கவனிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டனர். இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 40,000 நெல் மூட்டைகளில் பெரும்பாலானவை கிழிந்து நெல்மணிகள் கீழே கொட்டியது. அதன் பிறகும் நெல் மூட்டைகளைப் பாதுக்காக எந்த முயற்சியும் எடுக்கப்படாததுதான் வேதனை.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையில் அந்த நெல் மூட்டைகள் நனைந்துவிட்டன. இதனால் நெல்மணிகள் முளைப்புத்திறன் அடைந்துள்ளன. மழை நீரிலும், சகதியிலும் நெல் மணிகள் கிடந்து வீணாவதைக் கண்ணால் பார்க்கவே முடியவில்லை . 40,000 நெல் மூட்டைகளில் இருந்து கிட்டத்தட்ட 10,000 டன் நெல் வீணாகக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.

நெல்

Also Read: பொங்கல் கரும்பு கொள்முதலில் முறைகேடு; இடைத்தரகர்களால் பாதிக்கப்படும் விவசாயிகள்; கவனிக்குமா அரசு?

வெயில், மழை என இரவு, பகல் பார்க்காமல் விவசாயிகள் பாடுபட்டு கண்ணாக விளைவித்த நெல் மணிகளைப் பாதுக்காக்க திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கின் ஊழியர்கள் தவறிவிட்டனர். இனிமேலாவது அரசு இதில் உரிய கவனம் செலுத்தி தரமான பொருள்களைக் கொண்டு நெல் மூட்டைகளை பாதுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

AIARA

🔊 Listen to this கும்பகோணம் அருகே அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பான முறையில் நெல் மூட்டைகள் வைக்கப் படாததால் கடந்த சில தினங்களாகப் பெய்த மழையில் சுமார் 40,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. இதில் சுமார் ரூ.1 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படும் என்றும், பாடுபட்டு விளைவித்த நெல்லைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வீணாகும் நெல் மூட்டைகள் Also Read: 80 நாட்களாக…

AIARA

🔊 Listen to this கும்பகோணம் அருகே அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பான முறையில் நெல் மூட்டைகள் வைக்கப் படாததால் கடந்த சில தினங்களாகப் பெய்த மழையில் சுமார் 40,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. இதில் சுமார் ரூ.1 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படும் என்றும், பாடுபட்டு விளைவித்த நெல்லைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வீணாகும் நெல் மூட்டைகள் Also Read: 80 நாட்களாக…

Leave a Reply

Your email address will not be published.