பொள்ளாச்சி: பட்டியல் இன இளைஞர் மீது தாக்குதல்.. வலுக்கும் போராட்டம்! – நடந்தது என்ன?

  • 2

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹர சுதாகர். லோடிங் வேலை செய்து வரும் இவர், முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மேஜர் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

பொள்ளாச்சி

Also Read: `எப்படி எங்களை முறைக்கலாம்?!’ – கொலையில் முடிந்த கோவை பள்ளி மாணவர்கள் மோதல்

அப்போது சுதாகருக்கும், அங்கு பணியாற்றி வந்த பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சுதாகர் அந்தப் பணியில் இருந்து விலகிவிட்டார்.

ஆனாலும், அவர்களின் காதல் விவகாரம் ராமசாமி குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து ராமசாமி மனைவி தன் குடும்பத்திடம் எச்சரித்ததாகவும் சுதாகர் கூறியுள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு சுதாகர் மதுபோதையில் ராமசாமி வீட்டுக்கு சென்று தான் காதலிக்கும் பெண்ணிடம் பேச வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

ஹரிஹர சுதாகர்

சுதாகர் வாக்குவாதம் செய்தும் ராமசாமி தரப்பு அவரை அனுமதிக்கவில்லை. இதனால், சுதாகர் சிறிது நேரத்துக்கு பிறகு ராமசாமி வீட்டின் கேட்டை ஏறி குதித்திருக்கிறார்.

ஆத்திரமடைந்த ராமசாமி தனது பணியாள்கள் மூலம் தன்னை கட்டி வைத்து கடுமையாக தாக்கியதாக சுதாகர் புகார் அளித்துள்ளார். இதையெல்லாம் ராமசாமி வேடிக்கை பார்த்ததாகவும், அவரின் தூண்டுதலால்தான் தாக்குதல் நடைபெற்றதாகவும் சுதாகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இளைஞர் காயம்

அவரின் புகாரின் பெயரில் ராமசாமி உள்பட 6 பேர் மீது ஆனைமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சாதிய ஆதிக்கம் காரணமாக ராமசாமி, பட்டியல் இனத்தை சேர்ந்த சுதாகரை தாக்கியதாக இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு எழுந்தது.

ராமசாமி உள்ளிட்டோரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பல்வேறு இயக்கங்கள் சார்பில் பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனிடையே, கொரோனோ விதிகளை மீறி கூட்டம் கூடி போராட்டத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சி முற்போக்கு கூட்டணி கட்சியினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

போராட்டம்

மேலும், சுதாகரின் புகாரின் அடிப்படையில் ராமசாமி உள்ளிட்டோரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸ் கூறியுள்ளது.

AIARA

🔊 Listen to this கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹர சுதாகர். லோடிங் வேலை செய்து வரும் இவர், முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மேஜர் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். பொள்ளாச்சி Also Read: `எப்படி எங்களை முறைக்கலாம்?!’ – கொலையில் முடிந்த கோவை பள்ளி மாணவர்கள் மோதல் அப்போது சுதாகருக்கும், அங்கு பணியாற்றி வந்த பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சுதாகர் அந்தப் பணியில்…

AIARA

🔊 Listen to this கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹர சுதாகர். லோடிங் வேலை செய்து வரும் இவர், முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மேஜர் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். பொள்ளாச்சி Also Read: `எப்படி எங்களை முறைக்கலாம்?!’ – கொலையில் முடிந்த கோவை பள்ளி மாணவர்கள் மோதல் அப்போது சுதாகருக்கும், அங்கு பணியாற்றி வந்த பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சுதாகர் அந்தப் பணியில்…

Leave a Reply

Your email address will not be published.