`பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருக்கலாம்!’ – சொல்கிறார் ஹெச். ராஜா

  • 4

கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற கோயில் நிகழ்ச்சியில் பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜா கலந்து கொண்டார் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்தாண்டு பொங்கல் தொகுப்போடு ரூ.2,500 பணம் ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் கொடுக்கப்பட்டது.

ஹெச். ராஜா

Also Read: பொங்கல் பொருள்களில் கலப்படம்; அதிர்வை ஏற்படுத்திய விகடன் காணொலி! – அலுவலர் அதிரடி சஸ்பெண்ட்

அதை ரூ.5,000 ஆக கொடுக்க வேண்டும் என்று இப்போதைய முதல்வர் அன்று கூறினர். ஆனால் இந்தமுறை, நையா பைசா காசு கொடுக்காமல் பொங்கல் பரிசு தொகுப்பை மட்டும் கொடுத்துள்ளனர்.

அதுவும் மிளகுக்கு பதிலாக இலவம் பஞ்சு கொட்டை, மிளகாய் தூளுக்கு பதிலாக மரத்தூள், பல்லி, ஊசி சிரஞ்ச் என்ற கலப்படமான பொருள்களை கொடுத்து ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறது இந்த அரசாங்கம். பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 1,800 கோடி ரூபாயில் 1,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.

பொங்கல் பரிசு

மிகப்பெரிய ஊழல் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

குடியரசு தின விழா ஊர்தி சர்ச்சை ஓர் நாடகம். கடந்த 2006-ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசுடன், தி.மு.க கூட்டணியில் இருந்த போதும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தமிழக சிறப்பு ஊர்திகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. மற்ற ஆண்டுகளில் ஏன் அனுமதி கிடைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளில் பா.ஜ.க.ஆட்சி நடைபெறும் உ.பி.அரசின் வாகன ஊர்திக்கும் கூட அனுமதி கிடைக்கவில்லை.

ஹெச். ராஜா

பொங்கல் தொகுப்பு கொள்ளையை திசை திருப்ப தி.மு.க இந்த நாடகத்தை நடத்துகிறது. வெறுப்பு அரசியல் செய்யாவிடின், இவர்களுக்கு தூக்கமே வராது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க துடைத்து எறியப்படும்.” என்றார்.

AIARA

🔊 Listen to this கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற கோயில் நிகழ்ச்சியில் பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜா கலந்து கொண்டார் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்தாண்டு பொங்கல் தொகுப்போடு ரூ.2,500 பணம் ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் கொடுக்கப்பட்டது. ஹெச். ராஜா Also Read: பொங்கல் பொருள்களில் கலப்படம்; அதிர்வை ஏற்படுத்திய விகடன் காணொலி! – அலுவலர் அதிரடி சஸ்பெண்ட் அதை ரூ.5,000 ஆக கொடுக்க வேண்டும் என்று இப்போதைய முதல்வர் அன்று கூறினர்.…

Leave a Reply

Your email address will not be published.