பொங்கல் கரும்பு கொள்முதலில் முறைகேடு; இடைத்தரகர்களால் பாதிக்கப்படும் விவசாயிகள்; கவனிக்குமா அரசு?

நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக்கி வருகிறது. இதில் கரும்பும் இடம்பெறுகிறது. இதற்கான கரும்புகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடப்பதால் விவசாயிகள் நஷ்டத்தைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

கரும்பு

Also Read: ̀விதைத்து ஒருமுறை, அறுவடையோ 30 முறை!’ – புளியங்குடி கரும்பு விவசாயியின் வியப்பூட்டும் மகசூல்

“தமிழக மக்கள், பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நோக்கில், 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருள்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட உள்ளது. 20 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு 1,088 கோடி ரூபாயும், கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். லாபகரமான விலை கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும் இருந்தார்கள். ஆனால், இதைக் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், திருக்காட்டுப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் விழுப்புரம், கடலூர் திருச்சி உள்ளிட்ட இன்னும் பல்வேறு மாவட்டங்களிலும் செங்கரும்புகள் என அழைப்படும் பொங்கல் கரும்புகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பொங்கல் நெருங்கும் நிலையில் விவாசயிகள் கரும்புகளை அறுவடை செய்யத் தயாராகி வருகின்றனர். அரசின் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்குவதற்கு மட்டும் 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொள்முதல் செய்வதில் குளறுபடியும் முறைகேடும் நடைபெறுவதால், ஒரு கரும்புக்கு வெறும் 13 ரூபாய் விலை மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

கரும்பு

Also Read: `ஊதியம் உயர்த்துவதால் மட்டுமே ஊழல் ஒழிந்துவிடாது முதல்வரே!’ – நெல் கொள்முதல் நிலைய நிலவரம்

இதுகுறித்து பேசும் விவசாயிகள், “கரும்பு கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்யவில்லை. இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள். இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் மிகவும் குறைந்த விலைக்கு பொங்கல் கரும்புகளைக் கேட்கிறார்கள். ஒரு கரும்புக்கு அதிகபட்சம் 13 ரூபாய்தான் விலை தருகிறார்கள். இதனால் ஒரு கரும்புக்கு 20 ரூபாய் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்யும் பொங்கல் கரும்புக்கு மிகவும் குறைவான விலை கிடைக்கக் கூடிய நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள்.

🔊 Listen to this நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக்கி வருகிறது. இதில் கரும்பும் இடம்பெறுகிறது. இதற்கான கரும்புகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடப்பதால் விவசாயிகள் நஷ்டத்தைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கிறார்கள். கரும்பு Also Read: ̀விதைத்து ஒருமுறை, அறுவடையோ 30 முறை!’ –…

🔊 Listen to this நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக்கி வருகிறது. இதில் கரும்பும் இடம்பெறுகிறது. இதற்கான கரும்புகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடப்பதால் விவசாயிகள் நஷ்டத்தைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கிறார்கள். கரும்பு Also Read: ̀விதைத்து ஒருமுறை, அறுவடையோ 30 முறை!’ –…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *