பெரம்பலூர், அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏக்கள் பிரபாகரன், ராமச்சந்திரனுக்கு கொரோனா

பெரம்பலூர், அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏக்கள் பிரபாகரன், ராமச்சந்திரனுக்கு கொரோனா

  • 6

சென்னை: பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகரன், அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் கூடி வருகிறது. இதனால், தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவைகள் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அவ்வாறு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், தமிழக சட்டப் பேரவை கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது. இதற்காக கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சட்டப் பேரவை ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், காவல் துறையினர் என அனைவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இதையொட்டி,  பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகரன் (47) நேற்று முன்தினம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அவருடன், உதவியாளர் மணிகண்டன் (31), டிரைவர் ஆரோக்கியசாமி (30) ஆகியோரும் பரிசோதனை செய்தனர். இதில் எம்எல்ஏ உள்பட 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி  செய்யப்பட்டது. இதையடுத்து பிரபாகரன் திருச்சியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 2 பேரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் (41). திருச்சி எம்.பி திருநாவுக்கரசரின் மகனான இவர், சென்னை அண்ணாநகரில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் கொரோனா  பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.  இதையடுத்து ராமச்சந்திரன் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

🔊 Listen to this சென்னை: பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகரன், அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் கூடி வருகிறது. இதனால், தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவைகள் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அவ்வாறு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *