பெண் பத்திரிகையாளர் கூட்டு பாலியல் வழக்கு: தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக்கிய மும்பை உயர்நீதிமன்றம்!

மும்பை, மகாலட்சுமி பகுதியில் பாழடைந்து கிடந்த சக்தி மில்லில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 வயது பெண் புகைப்படப் பத்திரிகையாளர் இரவு நேரத்தில் 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பெண் பத்திரிகையாளர் தனது நண்பருடன் சக்தி மில்லில் போட்டோ எடுக்கச் சென்றார். அவர்களை விஜய் ஜாதவ் மற்றும் சலீம் ஆகியோர், மூடப்பட்டு கிடந்த சக்தி மில்லிற்கு அழைத்துச் செல்ல உதவினர். ஆனால் உள்ளே சென்ற பிறகு இருவரும் தங்களது நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து வரவழைத்தனர். ஐந்து பேரும் சேர்ந்து பெண் பத்திரிகையாளருடன் வந்திருந்த நபரை கட்டி வைத்துவிட்டு, அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதே கும்பல் 19 வயது பெண் டெலிபோன் ஆபரேட்டரையும் பாலியல் வன்கொடுமை செய்தது.

Sexual Harassment (Representational Image)

Also Read: சென்னை: பாலியல் தொழில் நடப்பதாக வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்! – பெண் பகீர் புகார்

இது தொடர்பான வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க மாநில அரசு சட்டத் திருத்தமும் கொண்டு வந்தது.

இந்நிலையில் தூக்கு தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மாநில அரசும், தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

நீதிபதிகள் எஸ்.ஜாதவ் மற்றும் கே.சவான் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு மனு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சவுத்ரி, விசாரணை நீதிமன்றம் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி தீர்ப்பு வழங்கி இருப்பதாகத் தெரிவித்தார். “376-இ சட்டப்பிரிவின் படி அடிக்கடி தவறு செய்பவர்களுக்குத்தான் தூக்கு தண்டனை விதிக்கப்படவேண்டும். ஆனால் எனது மனுதாரர் அது போன்று நடந்து கொள்பவர் கிடையாது” என்று வாதிட்டார்.

Court -Representaional Image

Also Read: பெண் குழந்தைகள் புகார் அளிக்க மாவட்டம்தோறும் வாட்ஸ்அப் எண்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்!

மாநில அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனையை உறுதிபடுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விசாரணைக்குப் பிறகு 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், குற்றவாளிகள் இந்த சமுதாயத்தில் சேர்ந்து வாழ்வதற்குத் தகுதியற்றவர்களாகின்றனர் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

🔊 Listen to this மும்பை, மகாலட்சுமி பகுதியில் பாழடைந்து கிடந்த சக்தி மில்லில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 வயது பெண் புகைப்படப் பத்திரிகையாளர் இரவு நேரத்தில் 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பெண் பத்திரிகையாளர் தனது நண்பருடன் சக்தி மில்லில் போட்டோ எடுக்கச் சென்றார். அவர்களை விஜய் ஜாதவ் மற்றும் சலீம் ஆகியோர், மூடப்பட்டு கிடந்த சக்தி மில்லிற்கு அழைத்துச் செல்ல உதவினர். ஆனால் உள்ளே சென்ற…

🔊 Listen to this மும்பை, மகாலட்சுமி பகுதியில் பாழடைந்து கிடந்த சக்தி மில்லில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 வயது பெண் புகைப்படப் பத்திரிகையாளர் இரவு நேரத்தில் 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பெண் பத்திரிகையாளர் தனது நண்பருடன் சக்தி மில்லில் போட்டோ எடுக்கச் சென்றார். அவர்களை விஜய் ஜாதவ் மற்றும் சலீம் ஆகியோர், மூடப்பட்டு கிடந்த சக்தி மில்லிற்கு அழைத்துச் செல்ல உதவினர். ஆனால் உள்ளே சென்ற…