பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது: பென் டிரைவ், 2 துப்பாக்கி பறிமுதல்

கோவை: கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோடு ரயில்வே கேட் அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டு செல்போனில் அவ்வழியாக செல்லும் பெண்களை படம் எடுப்பதாகவும், அவரிடம் இது குறித்து கேட்டால் துப்பாக்கி காட்டி மிரட்டுவதாகவும், நேற்று முன்தினம் காட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அந்த வாலிபர் போலீஸ் ஜீப்பை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கோவை பீளமேடு நவ இந்தியாவை சேர்ந்த சமீர் உல் ஹக் (37) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 2 துப்பாக்கிகளை (ஏர் கன்) போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் வைத்திருந்த பென் டிரைவை சோதனை செய்தனர். அதில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சாலைகளில் செல்லும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை அவர்களிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது, ஆயுத குற்ற சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

🔊 Listen to this கோவை: கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோடு ரயில்வே கேட் அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டு செல்போனில் அவ்வழியாக செல்லும் பெண்களை படம் எடுப்பதாகவும், அவரிடம் இது குறித்து கேட்டால் துப்பாக்கி காட்டி மிரட்டுவதாகவும், நேற்று முன்தினம் காட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அந்த வாலிபர் போலீஸ் ஜீப்பை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல்…