“புலி வேஷம் போட்ட பூனை!” – ராஜேந்திர பாலாஜி தலைமறைவு குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி
விருதுநகர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் மாணிக்கம் தாகூர், விருதுநகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமரின் இந்த வருகையிலே முக்கியமாக சில கோரிக்கைகளை முன் வைக்க விரும்புகிறேன். பட்டாசு தொழில் அழியும் நிலையில் இருக்கிறது. பட்டாசு தொழிலாளர்களின் நிலை மிகப் பரிதாபகரமாக உள்ளது. பட்டாசுத் தொழில் மீதான மத்திய அரசின் பார்வை மாற வேண்டும்.
மாணிக்கம் தாகூர்
அதற்கு பிரதமருடைய இந்த விஜயம் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பட்டாசு தொழிலில் சம்பந்தப்பட்டவர்களை சந்திப்பதற்கு பிரதமர் அனுமதி அளிக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டங்களும் வர விடாமல், குறிப்பாக தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கிறது” என்றவர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்துப் பேச ஆரம்பித்தார்.
“ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன?” என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கு முழு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அகங்காரம் காரணமாக, அவர் பேசிய பேச்சுக்கள் காரணமாக மாநிலத்தின் அமைச்சராக இருந்தவர் ஓடி ஒளியும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். விமான நிலையங்களுக்கு ’லுக் அவுட்’ நோட்டீஸ் விடப்பட்டுள்ள மாநில அமைச்சர் என்ற பெயருடையவராக இருக்கிறார்.
மாணிக்கம் தாகூர்
சட்டத்திற்கு முன்னால் நான் வந்து நிற்பேன் என்று சொல்ல தைரியம் இல்லாத புலி வேஷம் போட்ட பூனையாக இன்று ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். காவல்துறைக்கும், நீதிமன்றத்திற்கும் பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் அவரை தமிழக காவல்துறை, சட்டத்திற்கு முன்னாக கொண்டுவந்து நிறுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீதித்துறை அவருக்கு உரிய தண்டனையைக் கொடுக்கும்” என்றார்.

🔊 Listen to this விருதுநகர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் மாணிக்கம் தாகூர், விருதுநகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமரின் இந்த வருகையிலே முக்கியமாக சில கோரிக்கைகளை முன் வைக்க விரும்புகிறேன். பட்டாசு தொழில் அழியும் நிலையில் இருக்கிறது. பட்டாசு தொழிலாளர்களின் நிலை மிகப் பரிதாபகரமாக உள்ளது. பட்டாசுத் தொழில் மீதான மத்திய அரசின் பார்வை மாற வேண்டும். மாணிக்கம் தாகூர் அதற்கு பிரதமருடைய இந்த விஜயம் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை…