புரோ கபடி லீக்; வெற்றிக்கு ஏங்கும் தமிழ்தலைவாஸ்? யு மும்பாவுடன் இன்று மோதல்

புரோ கபடி லீக்; வெற்றிக்கு ஏங்கும் தமிழ்தலைவாஸ்? யு மும்பாவுடன் இன்று மோதல்

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு 13வது லீக் போட்டியில் தபாங் டெல்லி- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டி 24-24 என டையில் முடிந்தது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணி வீரர்களும் மாறிமாறி புள்ளிகள் எடுத்தனர். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் பாதியில் பெங்களூரு 18-17 என முன்னிலை பெற்றது.  2வது பாதியிலும் இதே நிலை தான் நீடித்தது. முடிவில் 36-35 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் பவன் ஷெராவத் 15 புள்ளி எடுத்தார். பெங்கால் அணியில் மணிந்தர் சிங் 17 புள்ளி எடுத்தார். பெங்கால் 3வது போட்டியில் முதல் தோல்வியை சந்தித்தது. பெங்களூரு 2வது வெற்றியை ருசித்தது. இன்று இரவு 7.30 மணிக்கு தமிழ் தலைவாஸ்-யு மும்பா, உ.பி.யோத்தா-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்சுடன் டை செய்த தமிழ்தலைவாஸ் 2வது போட்டியில், பெங்களுருவிடம் தோல்வி அடைந்தது. இன்று வெற்றிகணக்கை தொடங்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

AIARA

🔊 Listen to this பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு 13வது லீக் போட்டியில் தபாங் டெல்லி- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டி 24-24 என டையில் முடிந்தது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணி வீரர்களும் மாறிமாறி புள்ளிகள் எடுத்தனர். இதனால் ஆட்டத்தில் அனல்…

Leave a Reply

Your email address will not be published.