புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ்-அரியானா ஜெய்ப்பூர்-புனேரி இன்று மோதல்

புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ்-அரியானா ஜெய்ப்பூர்-புனேரி இன்று மோதல்

  • 4

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. நேற்றிரவு நடந்த 36வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் 18-12 என தலைவாஸ் பின்தங்கிய நிலையில், 2வது ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30-30 என சமனில் முடித்தது. 7 போட்டியில் தமிழ் தலைவாஸ் 2 வெற்றி, ஒரு தோல்வி, 4 டை என்று 22 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் 38-31 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி 5வது வெற்றியை பெற்று பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. அந்த அணியின் கேப்டன் பவன்குமார் ஷெராவத் 18 புள்ளிகள் எடுத்தார். இன்று இரவு 7.30 மணிக்கு பெங்கால் வாரியர்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ், இரவு 8.30 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

AIARA

🔊 Listen to this பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. நேற்றிரவு நடந்த 36வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் 18-12 என தலைவாஸ் பின்தங்கிய நிலையில், 2வது ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30-30 என சமனில் முடித்தது. 7 போட்டியில் தமிழ் தலைவாஸ் 2 வெற்றி, ஒரு தோல்வி, 4 டை என்று 22 புள்ளிகளுடன்…

Leave a Reply

Your email address will not be published.