புரோ கபடி லீக்; புனேரி பால்டன்-பாட்னா பைரேட்ஸ் தெலுங்கு-அரியானா இன்று மோதல்

புரோ கபடி லீக்; புனேரி பால்டன்-பாட்னா பைரேட்ஸ் தெலுங்கு-அரியானா இன்று மோதல்

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 15வது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ்- யு மும்பா அணிகள் மோதின. இதில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் பின்னர் பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் கடைசி நேரத்தில் போராடி 30-30 என போட்டியை சமனில் முடித்தது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் உபி யோத்தா-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் முதல் பாதியில் ஜெய்ப்பூர் 19-12 என வலுவான முன்னிலை பெற்றது. 2வது பாதியில் கடைசி நிமிடத்தில் 29-30 என ஜெய்ப்பூர் முன்னிலையில் இருந்தபோது டூ ஆர் டை நிலையில் கடைசி ரெய்டு சென்ற ஜெய்ப்பூர் கேப்டன் தீபக் கூடா 2 புள்ளி எடுத்தார். இதனால் 32-29 என ஜெய்ப்பூர் த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணியில் ரெய்டர் அர்ஜுன் தேஷ்வால் 11 புள்ளி எடுத்தார். 3வது போட்டியில் 2வது வெற்றி பெற்ற ஜெய்ப்பூர் 11 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியது. உபி. 2வது தோல்வியை சந்தித்தது. இன்று இரவு 7.30 மணிக்கு புனேரி பால்டன்-பாட்னா பைரேட்ஸ், இரவு 8.30 மணிக்கு தெலுங்கு டைட்டன்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.

🔊 Listen to this பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 15வது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ்- யு மும்பா அணிகள் மோதின. இதில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் பின்னர் பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் கடைசி நேரத்தில் போராடி 30-30 என போட்டியை சமனில் முடித்தது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் உபி யோத்தா-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *