புரோ கபடி லீக் தொடர்; குஜராத்-அரியானா ஸ்டீலர்ஸ், புனே-பெங்களூரு இன்று மோதல்

புரோ கபடி லீக் தொடர்; குஜராத்-அரியானா ஸ்டீலர்ஸ், புனே-பெங்களூரு இன்று மோதல்

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 25வது லீக் ஆட்டத்தில் யு மும்பா- உ.பி.யோத்தா அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டி 28-28 என டையில் முடிந்தது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகளை சேர்த்தன. கடைசி நேரத்தில் தெலுங்கு அணி ஒரு புள்ளி முன்னிலையுடன் வெற்றி வாய்ப்பில் இருந்த நிலையில் ரெய்டு சென்ற ரோகித்சர்மா பிடிபட்டதால் 34-34 என ஆட்டம் சமனில் முடிந்தது. தொடர்ந்து வலுவான தபாங் டெல்லியுடன் தமிழ் தலைவாஸ் மோதியது. தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய தலைவாஸ் பின்னர் பின்னடைவை சந்தித்தது. பின்னர் சுதாரித்து ஆடி கடைசி நேரத்தில் 30-29 என முன்னிலை பெற்றது. அந்த நேரத்தில் ரெய்டு வந்த டெல்லி வீரர் சந்தீப் நர்வால் ஒரு புள்ளி எடுத்ததால் 30-30 என ஆட்டம் சமனில் முடிவடைந்தது. ெடல்லியின் நட்சத்திர ரெய்டர் நவீன்குமார் 15 புள்ளிகள் எடுத்தார். 5 போட்டியில் தமிழ் தலைவாஸ் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 3 டை என்று 15 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. டெல்லி 3 வெற்றி, 2 டையுடன் 21 புள்ளியுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ், இரவு 8.30 மணிக்கு புனேரி பால்டன்-பெங்களூரு புல்ஸ் மோதுகின்றன.

AIARA

🔊 Listen to this பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 25வது லீக் ஆட்டத்தில் யு மும்பா- உ.பி.யோத்தா அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டி 28-28 என டையில் முடிந்தது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகளை சேர்த்தன. கடைசி நேரத்தில் தெலுங்கு அணி ஒரு புள்ளி…

Leave a Reply

Your email address will not be published.