புரோ கபடி லீக்கில் இன்று 3 போட்டி தபாங் டெல்லிக்கு அதிர்ச்சி கொடுக்குமா உ.பி. யோத்தா?

புரோ கபடி லீக்கில் இன்று 3 போட்டி தபாங் டெல்லிக்கு அதிர்ச்சி கொடுக்குமா உ.பி. யோத்தா?

  • 4

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 38வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்- பெங்கால் வாலியர்ஸ் அணிகள் மோதின. இதில் அரியானா 41-37 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்து 3வது வெற்றியை பெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதின. இதில் ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் 31-26 என்ற புள்ளி கணக்கில் புனேரியை வீழ்த்தி 3வது வெற்றியை ருசித்தது.இன்று இரவு 7.30 மணிக்கு உ.பி.யோத்தா-தபாங் டெல்லி, இரவு 8.30 மணிக்கு யு மும்பா-தெலுங்கு டைட்டன்ஸ், இரவு 9.30 மணிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதுகின்றன.டெல்லி 6 போட்டியில் 4ல் வெற்றி, 2ல் டை என 26 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணி டெல்லிதான். அந்த அணியின் நட்சத்திர ரெய்டர் நவீன்குமார், இந்த சீசனில் இதுவரை 106 புள்ளிகள் எடுத்து டாப்பில் உள்ளார். இன்று டெல்லி அணி வெற்றி பெற்று மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. மறுபுறம் உ.பி. யோத்தா டெல்லிக்கு அதிர்ச்சி அளிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

AIARA

🔊 Listen to this பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 38வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்- பெங்கால் வாலியர்ஸ் அணிகள் மோதின. இதில் அரியானா 41-37 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்து 3வது வெற்றியை பெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதின. இதில் ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் 31-26…

Leave a Reply

Your email address will not be published.