புனேரி பால்டனுடன் இன்று மோதல்: முதல் வெற்றியை பெறுமா தமிழ்தலைவாஸ்?

புனேரி பால்டனுடன் இன்று மோதல்: முதல் வெற்றியை பெறுமா தமிழ்தலைவாஸ்?

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 21வது லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- யு மும்பா மோதின. இதில் யு மும்பா 37-28 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை 28-42 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வீழ்த்தியது. பெங்களூரு கேப்டன் பவன் குமார் ஷெராவத் 22 புள்ளிகள் எடுத்தார். 4வது போட்டியில் 3வது வெற்றியை பெற்ற பெங்களூரு பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. இன்று இரவு 7.30 மணிக்கு தமிழ்தலைவாஸ்-புனேரி பால்டன், இரவு 8.30 மணிக்கு பாட்னா-பெங்கால் வாரியர்ஸ் மோதுகின்றன. தமிழ்தலைவாஸ் 3 போட்டியில் ஒரு தோல்வி 2 டிரா என 10வது இடத்தில் உள்ளது. இன்று வெற்றிக்கணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

🔊 Listen to this பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 21வது லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- யு மும்பா மோதின. இதில் யு மும்பா 37-28 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை 28-42 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வீழ்த்தியது. பெங்களூரு கேப்டன் பவன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *