புத்தாண்டு தினத்தில் பழங்குடியின மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமையா..?! – போலீஸ் விசாரணை

  • 6

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஓர் கிராமத்தை சேர்ந்த பழங்குடி மாணவி (வயது 12) அருகில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். புத்தாண்டு தினத்தின் போது, அவரின் பெற்றோர் வெளியே சென்றனர். அந்த நேரத்தில், அவர்களின் வீட்டுக்குள் புகுந்த முகமுடி அணிந்திருந்த மர்ம நபர்கள் சிலர் சிறுமியை தூக்கி சென்றுள்ளனர்.

பழங்குடி கிராமம்

மாலை வரை அந்த சிறுமியை சுமார் 5-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்து வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கிராம மக்களால் பரவலாக பேசப்பட்டாலும், வெளி உலகுக்கு பயந்து யாரும் புகார் கொடுக்க முன் வரவில்லையாம்.

இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் இந்தத் தகவல் போலீஸாருக்கு சென்றது. “பழங்குடி சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை, ஒட்டுமொத்த பழங்குடியின சமூகத்தின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது. இந்த வன்கொடுமையை கண்டிப்பதுடன், இதை செய்த குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.

பாலகிருஷ்ணன்

அதேபோல பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்கி, அவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். முக்கியமாக, பழங்குடி பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.” என்று சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியிருந்தார்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இந்தப் புகாரின் பேரில் பெண் காவலர் குழுவினர் அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி மற்றும் அவரின் பெற்றோர் பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என கூறியுள்ளனர். இதுகுறித்து ஆனைமலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை

குறுகிய காலத்துக்குள், புலன் விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளனர். சிறுமி குடும்பத்தினர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனரா அல்லது அவர்களுக்கு வேறு யாரேனும் அழுத்தம் கொடுத்தனாரா என்ற கோணங்களிலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

🔊 Listen to this கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஓர் கிராமத்தை சேர்ந்த பழங்குடி மாணவி (வயது 12) அருகில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். புத்தாண்டு தினத்தின் போது, அவரின் பெற்றோர் வெளியே சென்றனர். அந்த நேரத்தில், அவர்களின் வீட்டுக்குள் புகுந்த முகமுடி அணிந்திருந்த மர்ம நபர்கள் சிலர் சிறுமியை தூக்கி சென்றுள்ளனர். பழங்குடி கிராமம் மாலை வரை அந்த சிறுமியை சுமார் 5-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *