புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் ஏசி மெக்கானிக் கொலை

  • 2

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (எ) மணிகண்டன் (28), ஏசி மெக்கானிக். இவருக்கு கடந்த 4 மாதத்துக்கு முன்பு மதிவதனா (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு இவரது எதிர்வீட்டைச் சேர்ந்த சங்கர் (35), அவரது மனைவி ரமணி (28) ஆகியோர் தங்களது திருமண நாளையொட்டி நடுவீதியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது ரமணியின் உறவினர் ராஜா (26) மற்றும் அவரது நண்பர்களான தென்னல் பகுதியைச் சேர்ந்த அசார் (23), வில்லியனூர் கணுவாபேட் புதுநகர் தமிழ்செல்வன் (23) ஆகியோர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதை சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே அங்கிருந் தவர்கள் இருதரப்பையும் சமாதா னப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து சதீஷ் தனது வீட்டின் வெளியே நின்று போன் பேசியுள்ளார். அப்போது அங்கு வந்த அசார், தமிழ்ச்செல்வன், ராஜா, சங்கர் ஆகியோர் சேர்ந்து சதீஷை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அருகில் இருந்தவர்கள் அவரைமீட்டு புதுச்சேரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நள்ளிரவில் சதீஷ் பரிதா பமாக உயிரிழந்தார்.

AIARA

🔊 Listen to this புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (எ) மணிகண்டன் (28), ஏசி மெக்கானிக். இவருக்கு கடந்த 4 மாதத்துக்கு முன்பு மதிவதனா (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு இவரது எதிர்வீட்டைச் சேர்ந்த சங்கர் (35), அவரது மனைவி ரமணி (28) ஆகியோர் தங்களது திருமண நாளையொட்டி நடுவீதியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது ரமணியின் உறவினர் ராஜா (26) மற்றும் அவரது நண்பர்களான…

Leave a Reply

Your email address will not be published.