புதுச்சேரி மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: 6 பெண்கள் மீட்பு; 2 பேர் கைது

  • 4

புதுச்சேரி: புதுச்சேரி மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 6 பெண்களை போலீஸார் மீட்டனர். மேலும், 2 பேரை கைது செய்தனர்.

புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக ஒதியஞ்சாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 2 தனித்தனி அறைகளில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சென்னை மற்றும் திரிபுரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 பெண்களை போலீஸார் மீட்டனர். மேலும், அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட வந்த வாடிக்கையாளர்களான கடலூர் மஞ்சகுப்பத்தை சேர்ந்த மதன்ராஜ் (30), வில்லியனூர் மணவெளி அன்னப்பன் (32) ஆகியோரை கைது செய்தனர். பாலியல் தொழில் நடத்திய புரோக்கரான உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்த சிலம்பரன் தப்பி ஓடிவிட்ட நிலையில் அவரை தேடி வருகின்றனர்.

AIARA

🔊 Listen to this புதுச்சேரி: புதுச்சேரி மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 6 பெண்களை போலீஸார் மீட்டனர். மேலும், 2 பேரை கைது செய்தனர். புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக ஒதியஞ்சாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 2 தனித்தனி அறைகளில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. பாலியல்…

Leave a Reply

Your email address will not be published.